அதுக்கப்புறம் அவன்கிட்ட பேசல. ஆனா நினைக்காம இல்லை.
நானும் காலேஜ் போய் சேர்ந்தேன்.
அவன பத்தி யோசிக்க கூடாதுன்னு நினைக்கிற ஒவ்வொரு நொடியும், அவன் என் மனசுல எந்த ஆழத்துல பதுங்கி இருக்கான்னு தெரிய ஆரம்பிச்சது.
ப்ளூ வித் ரெட்.. அவன் என்கிட்ட ஃபர்ஸ்ட் டைம் பேசினப்ப போட்டிருந்த டிரஸ். இந்த மாரி சின்ன சின்ன விஷயம் கூட என்ன டிஸ்டர்ப் பண்ண ஆரம்பிச்சது.
இதெல்லாம் என் மனசுல ஓடிட்டு இருந்தாலும் அம்மாக்கு பண்ணி குடுத்த சத்தியத்துக்காக ஃபோன் பண்ணாம இருந்தேன்.
அப்ப அப்ப எனக்குள்ள கற்பனைகள உருவாக்கி வாழ்ந்திட்டு இருந்தேன்.
திடீர்னு என் கண் முன்னாடி வந்து அவன் நின்னு லவ் பண்றேன்னு சொன்னா.. எப்படி இருக்கும்??
நல்லாத்தான் இருக்கும். பட் அது நடக்காது.
யோசிச்சு யோசிச்சு 2 வருஷம் ஓடிருச்சு. இந்த நாசமா போன மனசு இருக்கு பாத்தீங்களா.. திரும்ப அவன தேட ஆரம்பிச்சது. அது நாள் வரைக்கும் என் மனசுக்குள்ள அவன் இத தெரியாம பண்ணிட்டான், கண்டிப்பா என்னைக்காச்சும் ஃபீல் பண்ணுவான்னு நம்பியிருந்தேன்.
நவம்பர் 12 ,2015
கஷ்டப்பட்டு அவன் ஃபேஸ்புக் ஐடிய கண்டுபிடிச்சு பேசினேன். இல்ல கேட்டேன்.ஏன் அப்படி பண்ணன்னு..
உன்கிட்ட பேசனும் நம்பர் தா ன்னு டெக்ஸ்ட் பண்ணான். பட் ரெக்கார்ட் பண்ணலன்னு கன்ஃபார்ம் பண்ணிட்டு கால் பண்ண சொன்னேன். ஆனா அவன்கிட்ட இந்த மாதிரி உண்மையா இருக்குறதெல்லாம் எதிர்பார்க்க கூடாதுன்னு எனக்கு தெரியாம போச்சு.
அவன் குரல கேட்டதுமே.. பழசெல்லாம் தூசி தட்ட ஆரம்பிச்சது என் மனசு. சரியான ஜொல்லு பார்ட்டி ங்க என் மனசு. கருமம். அன்னைக்கு அவன்கூட பேசுறப்ப விக்கி இவ்ளோ நல்லவனான்னு நம்புற அளவுக்கு பேசினான்.
"என்ன சாரதா.. ரொம்ப கெத்தா பேசுறமாதிரி இருக்கு??"'விக்கி
"அப்படிலாம் இல்லையே!!ஏன் அப்படி சொல்றீங்க.?"
YOU ARE READING
காதலில் விழுந்தேன்!!
Teen Fictionநாம நினைக்கிற மாறிலாம் நடந்துட்டா வாழ்க்கைல இருக்க சுவாரசியம் போயிரும்.. ஒரு தவறான முடிவு வாழ்க்கைய எப்படிலாம் புரட்டி போடும் அப்படிங்குறதுக்கு.. ஒரு சின்ன உதாரணம் தான் இது.. காதல் . காதல். ன்னு ஓடுரோமே... அதுல அப்புடி என்ன சுகத்த கண்டுட்டோம்.. ப...