ராஜியாகிய நான்!!::
" ராணி அக்கா.. பிடிங்க இத."
" வேண்டாம் பாப்பா.. தம்பி திட்டும். "
அவங்க பையனுக்கு உடம்பு சரி இல்லன்னு பணம் கேட்டாங்க அவர்கிட்ட.. அவர் மறந்திட்டு ஏதோ டென்ஷன்ல கிளம்பிட்டார்.
" அக்கா.. அவர் எதும் சொல்லமாட்டார்.சரி இருங்க நானே ஃபோன் பண்ணி கேக்குறேன். "
உடனே ஷங்கருக்கு கால் பண்ணேன்.
" மாமா..( அவரோட கண்டிஷன் .. நான் அப்படித்தான் கூப்பிடனுமாம். ) ராணி அக்கா பணம் கேட்டாங்க இல்ல?? " நான்.
" குடுத்திடு டா. நான் மறந்திட்டேன். " ஷங்கர்
" பாருங்க.. அவரே ஓகே சொல்லிட்டார் பிடிங்க. இன்னிக்கு நான் பார்த்துக்குறேன். நீங்க பொறுமையா வாங்க .. முத்துக்கு உடம்பு சரி ஆகட்டும். "
அவங்கள அனுப்பி வச்சிட்டு நான் அவருக்கு சமைக்கலாம்னு ஆரம்பிச்சேன்.
என்னத்த சமைக்கலாம்???
முட்டைன்னா உயிரு அந்த மனுஷனுக்கு..
" டேய்.. நீ எல்லா வேலையும் பார்த்திட்டு இருக்காத.. நான் வெளில ஆர்டர் பண்றேன். சாப்பிடு.. " ஷங்கர்.
என் மன ஓட்டத்த கேட்ட மாதிரி 5 நிமிஷத்துல கால் பண்ணார்.
" அப்ப உங்களுக்கு என்மேல நம்பிக்கை இல்லையா மாமா??நான் நல்லா தானே சமைப்பேன். "
" இல்ல டா. உனக்குத்தான் வேலைன்னு நினைச்சேன். சரி 2 மணிக்கு வர்றேன். "
வேகமா எக் பிரியாணி செய்ய ஸ்டார்ட் பண்ணேன்.
பொண்ணுங்களோட பெரிய சந்தோஷமே வீட்டுக்காரன உட்கார வச்சி அவங்க ரசிச்சு ருசிச்சு சாப்பிடறத பார்க்குறதுதான்.
அவர் டேபிள்ள உட்கார்ந்ததும் எடுத்து வச்சேன் சாப்பாட..
" சூப்பரா இருக்கு டா. !! அட அட.. "
சாப்பிட சாப்பிட ரசிச்சிட்டே தான் சாப்பிட்டார்.
" இந்தா டா.. நீயும் சாப்பிடு.. " தட்ட எடுக்க போனார்.
YOU ARE READING
காதலில் விழுந்தேன்!!
Teen Fictionநாம நினைக்கிற மாறிலாம் நடந்துட்டா வாழ்க்கைல இருக்க சுவாரசியம் போயிரும்.. ஒரு தவறான முடிவு வாழ்க்கைய எப்படிலாம் புரட்டி போடும் அப்படிங்குறதுக்கு.. ஒரு சின்ன உதாரணம் தான் இது.. காதல் . காதல். ன்னு ஓடுரோமே... அதுல அப்புடி என்ன சுகத்த கண்டுட்டோம்.. ப...