மதிய பார்த்ததும் தான் எனக்கு சுயநினைவு வந்துச்சு.
அப்படினா??இங்க பேசிட்டு இருந்ததெல்லாம் அவ கேட்டிட்டு இருந்தாளா??
கடவுளே!!
குடிபோதையில எல்லாரும் உண்மைய கக்குவாங்கன்னு கேள்விபட்டிருக்கேன். இன்னிக்குத்தான் கண்கூடா பார்த்தேன்.
15 நிமிடங்களுக்கு முன்.:
"நீ ஒன்னும் புரியவைக்கவேண்டாம் . கிளம்பு"-மதன்.
" நான் எல்லாத்துக்கும் உண்மைய சொல்லிட்டுத்தான் இங்க இருந்து கிளம்புவேன். "-செல்வம் அடம்பிடிக்க..
" மதி.... மதி.. வெளிய வா"- செல்வம் கத்தினான்.
" இப்ப எதுக்கு அவள கூப்பிடுற??உன்னை வெளிய போக சொன்னேன்"-மதன்.
"அவர பேச விடுங்டளேன் மதன்"-ஷங்கர்.
" வேண்டாம் .. அவன முதல்ல அனுப்புங்க."-மதன்.
திரும்ப ரெண்டு பேரும் கைய உயர்த்திட்டு போக பெரும் போராட்டமா ஆயிடுச்சு.
" அவங்க அம்மா வேற முடிவு எடுப்பாங்கன்னு எதிர் பார்த்தேன். ஆனா அவங்க நான் எதிர்பார்த்த விட வேற மாதிரி முடிவு எடுத்திட்டாங்க. "- செல்வம்
அவர பிடிச்சிட்டு இருந்த சூர்யா கைய எடுக்க.. நாங்க எல்லாரும் ஒருத்தர் முகத்த மாறி மாறி பார்த்திட்டு இருந்தோம்.
" இல்ல நான் தெரியாம தான் கேக்குறேன். நாங்க துரத்தி துரத்தி லவ் பண்ணுவோமாம். நீங்க வந்து
நான் வேற ஒருத்தன கல்யாணம் பண்ணுறேன்னு சொன்னா.. சேத்து வைப்போமா??"-செல்வம்." சார்.. அன்னைக்கு ஒரு மாதிரி பேசினீங்க.. இப்ப இப்படி சொல்றீங்க??"- ஷங்கர்.
" ஆமா தம்பி.. மதி எனக்கு கிடைக்கனும்னா பல பல சித்து விளையாட்டுகள் பண்ணிதானே ஆகனும்??"- அவர் தோல்ல கைய போட்டுட்டே சொன்னாரு.
திரும்ப அவனே பேசினான்.
" இரண்டு நாள் முன்னாடி தான் அவங்க அம்மா கிட்ட தெளிவா பேசனேன் . எனக்கு மதிய கட்டி குடுங்கன்னு.. அதுக்குபோய்.. சே!! பாவம் . ஆனா எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க நான் தான் மதிக்கு புருஷன் ஆகப்போறவன். மாமா பொண்ண கல்யாணம் பண்ற உரிமை எனக்கு மட்டும் தான் இருக்கு. "-செல்வம்.
YOU ARE READING
காதலில் விழுந்தேன்!!
Teen Fictionநாம நினைக்கிற மாறிலாம் நடந்துட்டா வாழ்க்கைல இருக்க சுவாரசியம் போயிரும்.. ஒரு தவறான முடிவு வாழ்க்கைய எப்படிலாம் புரட்டி போடும் அப்படிங்குறதுக்கு.. ஒரு சின்ன உதாரணம் தான் இது.. காதல் . காதல். ன்னு ஓடுரோமே... அதுல அப்புடி என்ன சுகத்த கண்டுட்டோம்.. ப...