டிங் டாங் டிங் டாங்...
" சாரதா யார் வந்திருக்காங்கன்னு பாரு.. "
" இதோ பாக்குறேன் மா.. "
கதவு திறந்ததும் அந்த மூஞ்சில ஒரு குத்து விடனும் போல இருந்துச்சு.. அதான்ங்க காலைல ரோட்டுல ஒருத்தன் கூட சண்டை போட்டேன்ல அவன் தான். சட்டென சுதாரித்துக்கொண்டு..
" யாரு சார் நீங்க?? என்ன வேணும்??"
" ஹலோ மேடம் நீங்க யாரு எங்க வீட்டுக்குள்ள இருந்து வர்றீங்க?? .. திருடி !! திருடி!!"
"என்னது உங்க வீடா?? சாரி சார்.. நீங்க...??"
அங்க வந்த எங்க முதலாளி அம்மா...
வெயிட் .. அவங்கள பத்தி கொஞ்சம் இன்ட்ரோ குடுத்துர்றேன்..
53 வயசு அந்த பெண்மணிக்கு அந்த காலத்துலயே சாந்தா ன்னு பேர் வச்சிருக்காங்க.. ஆனா பெயர் மட்டும் தான் அப்படி . ஆள் அப்படியே ஆப்போஸிட் . ரொம்ப நல்லவங்கதான். ஆனா கோவம் மட்டும் மூக்குக்கு மேல வரும்.. அவங்களுக்கு ஒரு பொன்னு . அவங்கள கல்யாணம் பண்ணிக்குடுத்துட்டாங்க. யூ.எஸ்.ஏ ல இருக்காங்க.
இன்னும் ரெண்டு பசங்க . ஒருத்தருக்கு கல்யாணம் ஆயிருச்சு .. சென்னைல இருக்காங்க.. இன்னொரு பையன் கோயம்பத்தூர்ல என்ஜினீயரிங் படிக்கிறதா சொன்னாங்க.
நேத்தே வந்திருவாங்கன்னு வேற சொன்னாங்களே!!
ஐய்யய்யோ!!!!!
ஒருவேளை அவர் தான் இவரோ??
போச்சு சாரா .. உன் வேலைக்கு பெரிய ஆப்பு ரெடி ஆயிருச்சு..
" என்னடி பண்ற.. யார்கூட வளவள ன்னு இங்க பேசிட்டு இருக்க...... டேய்ய்ய்.. இங்க என்னடா வேலைகாரி கூட பேசிட்டு இருக்க .. போ.. பால் பாக்கெட்ட அவள்ட்ட குடுத்துட்டு நீ உள்ள போய் உன் வேலைய பாரு.. எங்கயோ கிளம்பனும்னு வேற சொன்னீல.. கிளம்பு"
நான் நினைச்சது கன்ஃபார்ம் ஆச்சு.. சரி அம்மாட்டயே கேட்க வேண்டியது தான்.
" அம்மா.. இவங்க??"
" என் பையன் சூரியா டி.. கோயம்புத்தூர்ல படிக்கிறான்னு சொன்னேன்ல அவன் தான்.. அடியேய்.. அவன் ஊர்ல இருந்து நாக்கு செத்து போய் வந்திருக்கான். ஏதாச்சும் நல்லா ருசியா போய் செய்.. காலைல நல்ல மொறு மொறு ன்னு தோசை ஊத்தி சூடா அவனுக்கு போய் குடு.. ஃபர்ஸ்ட் நல்ல டீயா போடு.. நா ரூம்ல இருக்கேன்.. "
YOU ARE READING
காதலில் விழுந்தேன்!!
Teen Fictionநாம நினைக்கிற மாறிலாம் நடந்துட்டா வாழ்க்கைல இருக்க சுவாரசியம் போயிரும்.. ஒரு தவறான முடிவு வாழ்க்கைய எப்படிலாம் புரட்டி போடும் அப்படிங்குறதுக்கு.. ஒரு சின்ன உதாரணம் தான் இது.. காதல் . காதல். ன்னு ஓடுரோமே... அதுல அப்புடி என்ன சுகத்த கண்டுட்டோம்.. ப...