" மச்சான்... இதுக்கு மேலையும் அவளுக்கு வளைகாப்பு பண்ணாம இருக்ககூடாது டா. எட்டு மாசம் தாண்டிருச்சு. நான் அவள அவங்க அம்மா வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் இன்னிக்கு . அங்க இருந்து வேலைக்கு போறேன். வீட்ட பாத்துக்கோ டா."- அரவிந்த் அண்ணா எங்க கிட்ட சொல்லிட்டு இருந்தாங்க.
" பத்திரமா கூட்டிட்டு போடா. பணம் எதும் வேணும்னா கால் பண்ணு . யோசிக்காத. முதல்ல நீ பயப்படாத டா. பிரீதி தைரியமா தான் இருக்கா. "சூர்யா.
" அவளுக்கு ஒன்னும் ஆகாம இருந்தா எனக்கு அதுவே போதும் டா. "
" அண்ணா.. அப்படிலாம் யோசிக்காதீங்க. அக்காக்கு எதும் ஆகாது. வலி வந்தா உடனே சொல்லுங்க நான் வர்றேன். "நான்
"இப்ப என்ன சிரிப்பு உங்களுக்கு?? "- சூர்யா தான்..
" இல்லடீ நீ தான் உலகத்துலையே நிறைய பிரசவம் பாத்திருக்கன்னு சொன்னாங்க . பெரிய மனுஷி பாரு. "- சூர்யா.
" ஐய்யோ!! துணைக்கு கூப்பிட சொன்னேன். நல்லா சாப்பிடுங்க அக்கா. "
" அவன அண்ணன்னு கூப்பிட்டா முதல்ல என்ன அண்ணின்னு கூப்பிடு டீ. "- ப்ரீதி .
"சரிங்க அண்ணி."-
" சரி மச்சான். டைம் ஆகுது நான் கிளம்புறேன். போயிட்டு வர்றேன் சாரதா. "
எல்லாரையும் வழி அனுப்பிவச்சிட்டு அவருக்கு சாப்பாடு எடுத்து வச்சேன்.
" அத்தைகிட்ட பேசினீங்களா??"- நான்.
" ம்ம். பேசினேன் டீ. அக்காக்கும் மாமாக்கும் வர்க்ல எதோ லாஸ் ஆயிடுச்சு போல.. சோ திரும்ப அமெரிக்கா போலாம்னு இருகாங்களாம். எல்லாரும் என்ன விட்டுட்டு போயிட்டீங்கன்னு புலம்பிட்டு இருக்காங்க. "
" இங்க வர சொல்லலாம்ல.. "- நான்.
" முதல்ல அரவிந்த கிட்ட கேக்கனும் டீ. அவன் ஊருக்கு போர சமையத்துல கேட்டா நல்லா இருக்காதுன்னு தான் கேக்கல. அவன் வர்றதுக்குள்ள வேற வீடு பார்க்குறேன். அப்புறம் அம்மாவையும் கூட்டி வந்து வச்சிக்கலாம். "
YOU ARE READING
காதலில் விழுந்தேன்!!
Teen Fictionநாம நினைக்கிற மாறிலாம் நடந்துட்டா வாழ்க்கைல இருக்க சுவாரசியம் போயிரும்.. ஒரு தவறான முடிவு வாழ்க்கைய எப்படிலாம் புரட்டி போடும் அப்படிங்குறதுக்கு.. ஒரு சின்ன உதாரணம் தான் இது.. காதல் . காதல். ன்னு ஓடுரோமே... அதுல அப்புடி என்ன சுகத்த கண்டுட்டோம்.. ப...