உடனே மதனுக்கு ஃபோன் பண்ணேன்..
" மதன் ,கொஞ்சம் எங்க செக்ஷன் வரைக்கும் வர்றியா?? "ஃபோன் பண்ண 5 நிமிஷத்துல வந்துட்டான்..
" என்ன ஆச்சு சாரா?? "- மதன்..அவன் குரல்ல அவ்ளோ பதற்றம் இருந்தது. அவன் அவள் மேல் வைத்துள்ள காதலை சொல்லாமல் சொன்னது.. ஆனா அந்த மரமண்டை மதிக்கு அது எப்ப புரியபோகுதுன்னு தான் எனக்கு கவலையா இருந்துச்சு.. சரி இப்ப விஷயத்துக்கு வர்றேன்.
மதனுக்கு எல்லாத்தையும் சொன்னோம்.. சொல்ல சொல்ல அவன் முகத்துல தெரிஞ்ச கோவத்தை வர்ணிக்க வார்த்தையே இல்ல..
மதியின் கூற்று:
நேற்று மாலை சாரா பத்தி எல்லாம் தெரிஞ்சதும் ரொம்ப கோவம் வந்திருச்சு , ஆசை தீர அடிக்கவும் சொஞ்சேன். ஆனா இப்ப நானும் ராஜி மட்டும் தான் அவளுக்கு ஆதரவுன்னு புரிஞ்சது.இனி அவள சந்தோஷமா வச்சிக்கனும்னு முடிவு பண்ணி.. நைட் ஃபுல்லா பேசிட்டு அப்புறம் தூங்கிட்டோம்.காலைல நா எழுந்திருக்கிறதுக்குள்ள அவ வேலைக்கு போயிட்டா.. அப்புறம் கொஞ்ச நேரத்துல நானும் கடைக்கு கிளம்பிட்டேன்..
ராஜி பத்தின கவலை ரொம்ப ஜாஸ்தி ஆயிருச்சு.. அவங்க வீட்டுல யாருமே ஃபோன் எடுக்கல.. மனசுல ஏதோ உறுத்தினாலும், அவ அவங்க அப்பா அம்மா கூட பத்திரமா இருப்பாங்குற நம்பிக்கை மட்டும் இருந்துச்சு.
கடைக்கு போனா.. எங்களுக்குன்னு வாச்ச சூப்பர்வைசர் இருக்காரே... ரொம்பபபப நல்ல மனுஷர்.. என்ன பண்ணாருன்னு கேக்குறீங்களா??
வேற பிரான்ச்ல இன்னிக்கு வர்க் அதிகம்னு அங்க போக சொல்லிட்டாங்க.. நானும் அந்த ஆளுட்ட கெஞ்சி கெஞ்சி பார்த்தேன்.. கல் நெஞ்சுகாரர்..
அங்க போயிட்டா நான் எப்படி மத... ஊப்ஸ்... ஒன்னுமில்லைங்க..
சரி .. சரி.. ஒத்துக்குறேன்..
அங்க போயிட்டா நான் எப்படி மதன பார்க்குறது?? சிரிக்காதீங்க பா.. அது ஒன்னும் அவ்ளோ பெரிய தப்பு இல்லையே!!!!!!ஆனா அவன் தான் என்ன பார்க்கமாட்றான்.. நானா போய் பேசினா தப்பா எடுத்துப்பானேன்னு பயமாவும் இருக்கு . சும்மா கேஷுவலா எல்லார்கிட்டையும் பேசுற மாதிரி மட்டும் தான் பேசுறான்..
ம்ச்.. இப்ப அங்க வேற போகனும் . அவன்கிட்ட ஸிம்பாலிக்கா சொல்லியே ஆகனும். கொஞ்சமாவது அந்த பொறுக்கி பைய ஃபீல் பண்றானான்னு பார்க்கனும்..அவன் சுடிதார் செக்ஷன்ல பில் போடுறதுக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருந்தான்.. தேங்க் காட்.. பக்கத்துல சுரேஷ் அண்ணா நின்னுட்டு இருந்தாங்க.. அவங்கள்ட்ட பேசுறமாதிரி தான் அவன்ட்ட பேசனும்..
என்ன பேசுறது??
என்ன பேசுறது??
என்ன பேசுறது??
கண்டுபுடிச்சிட்டேன்..
" சுரேஷ் அண்ணா எப்படி இருக்கீங்க ?"
" நல்லா இருக்கேன் மதி.. அப்புறன் என்ன இந்த பக்கம்??"
உங்க கூட நிக்கிறானே அவனத்தான் பார்க்கவந்தேன்.. இப்படி சொன்னா நல்லாவா இருக்கு?? நோ நோ!!
" இல்ல அண்ணா.. நீங்க பாங்க் போறீங்கன்னு கணேஷ் சார் சொன்னார்.. என்னையும் நம்ம கடை பிரான்ச்ல ஏதோ வர்க் இருக்குன்னு பார்க்க சொல்லிருக்காங்க.. என் வண்டிய சர்வீஸ் குடுத்திருக்கேன் னா...அதான் அப்படியே உங்ககூடவே போயிரலாம்னு.. "
சட்டுனு ஒரு பார்வை என்ன பார்த்தான்.
நான் ஒரு உண்மைய சொல்லவா??
அவன் கண்ணை என்னால சத்தியமா பார்க்கமுடிலங்க.. அந்த நிமிஷமே அவனை கொன்னுறுவேனோன்னு பயமா இருக்கு.. என்ன இப்படி கொடுமை படுத்துறதுக்கு..
ம்ச்.. என்ன சொல்லி என்ன பண்ண??..
" ஐய்யயோ !!! என் வண்டிய தம்பி எடுத்துட்டு போயிட்டான் மா.. நானே வினோத் கூட தான் போறேன்.. நீ வேணும்னா மதன் கூட போறியா?? "
கண்டிப்பா போறேன்னு கத்தனும் போல இருந்துச்சு..
பட்.. அவன் எப்படி எடுத்துப்பான்னு தெரில..
" அவனுக்கு எதும் வேலை இருக்கபோகுது அண்ணா.."
பரவாயில்ல நா வர்றேன்னு சொல்லுடா.. ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....
" ஸாரி மதி எனக்கு கொஞ்சம் வீட்டுல வேலை இருக்கு"- மதன்.
" இட்ஸ் ஓகே மதன் பரவாயில்ல நான் பஸ்ல போயிக்கிறேன் .. "
இதுக்கு மேல இங்க இருக்ககூடாது... இன்னும் செருப்பால அடிக்கிலன்னு சந்தோஷபட்டுக்கோ.. விறு விறுன்னு நகர்ந்து பஸ் ஏறிட்டேன்.. எனக்கு எந்த வேலையுமே ஓடல.. சாரா க்கூட இருந்தா எதாச்சும் பேசிட்டு இருந்திருப்பேன். இங்க அவன பத்தி மட்டும் தான் யோசிச்சிட்டு இருக்கு வேண்டியதா இருக்கு. கஷ்டம் மதி... ரொம்ப கஷ்டம்..
வேலைலாம் முடிச்சிட்டு 6 மணி ஆச்சு.. கணேஷ் சார் ஃபோன் பண்ணி கிளம்பி அங்க வர சொன்னாரு.. பஸ் ஏறி கடைக்கு பக்கத்துல இருக்க ஸ்டாப்ல இறங்கி நடந்து போனேன்.
YOU ARE READING
காதலில் விழுந்தேன்!!
Teen Fictionநாம நினைக்கிற மாறிலாம் நடந்துட்டா வாழ்க்கைல இருக்க சுவாரசியம் போயிரும்.. ஒரு தவறான முடிவு வாழ்க்கைய எப்படிலாம் புரட்டி போடும் அப்படிங்குறதுக்கு.. ஒரு சின்ன உதாரணம் தான் இது.. காதல் . காதல். ன்னு ஓடுரோமே... அதுல அப்புடி என்ன சுகத்த கண்டுட்டோம்.. ப...