நைட்ல ஒரு தடவ அம்மாக்கு காய்ச்சல் அதிகமாகி அனத்த ஆரம்பிச்சிட்டாங்க.ரெண்டு தடவ மாத்திரை குடுக்கிற மாதிரி ஆயிருச்சு.
என்னைக்கும் இல்லாம இன்னிக்கு சீக்கிரமே எழுந்தேன். கொஞ்சம் வேகமாவே எல்லா வேலையும் பார்த்திட்டு கிளம்ப முடிவு பண்ணேன்.
"சூர்யா டிபன் சாப்பிட வாங்க"
அவர சமாதானம் பண்ணி சாப்பிட வச்சி, சீக்கிரமே வீட்டுக்கு வந்திட்டேன்."என்னடி இது புதுசா??"-மதி.
"அம்மா சொல்லலையா மதி??"
"சொன்னாங்க. ஆனா உனக்கு அறிவு வேண்டாம்??அவங்க அம்மாக்கு உடம்பு சரியில்லனா அவங்க அக்கா வந்து தங்கட்டும் . நீ எதுக்கு அங்க இருந்த??"
"அவர் ரொம்ப பாவம் டீ . அழுதிட்டாரு. அதான்..."
"நீ பண்றது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல சாரா.. சொல்லிட்டேன். இன்னிக்கு நல்லா பேசுவான். திரும்ப நாளைக்கு லிமிட், பார்டர்னு பேசுவான். தேவையா உனக்கு??"
"சரி விடு.. இனிமேல் இப்படி நடக்காது.போதுமா"நான்.
"பார்ப்போம். "
சொல்லி முடிக்கல. ஃபோன் வந்தது அவர்கிட்ட இருந்து.
" மதி... ஃபோன்.."
கேவலமா ஒரு பார்வை பார்த்தா.
"இங்க நின்னு பேசுடீ"
"சூர்யா சொல்லுங்க"
"நீ வீட்டுக்கு பத்திரமா போயிட்டியான்னு கேக்கத்தான் ஃபோன் பண்ணேன் சாரா."-சூர்யா
இந்த ஆளுக்கு நேர காலமே.தெரியல.
"நான் வந்துட்டேன். அப்புறம் பேசுறேன். "
"இங்க என்னடி நடக்குது?? எந்த வீட்டுல ஓனர் வேலைக்காரிக்கு ஃபோன் பண்ணி விசாரிக்கிறான்??"
"என்னடி உன் பிரச்சனை??"
"!பசங்கள எப்பவும் நம்பாத டீ.!"
"சரி சரி.. ஹே அம்மா எங்க மதி??"
"கோவிலுக்கு போயிருக்காங்க . ஏன்"
"குட்.. மதன் உன்கிட்ட பேசனும்னு சொன்னான். பேசிட்டு வா."
"என்னாச்சு??"-மதி
YOU ARE READING
காதலில் விழுந்தேன்!!
Teen Fictionநாம நினைக்கிற மாறிலாம் நடந்துட்டா வாழ்க்கைல இருக்க சுவாரசியம் போயிரும்.. ஒரு தவறான முடிவு வாழ்க்கைய எப்படிலாம் புரட்டி போடும் அப்படிங்குறதுக்கு.. ஒரு சின்ன உதாரணம் தான் இது.. காதல் . காதல். ன்னு ஓடுரோமே... அதுல அப்புடி என்ன சுகத்த கண்டுட்டோம்.. ப...