27

4K 139 3
                                    

கடைக்கு போனதும் மதன் வந்தான்.

"என்ன சாரா... அண்ணன கண்டுக்க கூட மாட்ற??"

"நீ தங்கச்சின்னு என்கிட்ட வந்தா பரவாயில்ல. மதிக்கு தூது போற புறாவா தானே பார்க்குற!!!"

"தெய்வமே!! தெரியாம கேட்டுட்டேன். ஆள விடு!"

"அது.. அந்த பயம் இருக்கனும். அப்புறம் எப்ப பிரபோஸ் பண்ண போற என் ஃபிரண்டுக்கு??"-நான்.

"பண்ணிக்கலாம் பொறுமையா. சரி அன்னைக்கு ஒருத்தர் வந்து பேசினாரே அது யாரு??உன் சொந்தங்கள பத்தி கூட நீ எதுவுமே சொன்னதில்லை."

இவன்டையும் திட்டு வாங்குற அளவுக்கு எனக்கு தெம்பு இல்லை.

"அதுவா..தெரிஞ்சவங்க மதன்.. "

நாங்க பேசிட்டே இருக்கப்ப யாரோ வந்தாங்க.

விக்கி தான்.

"என்ன வேணும்??"-நான்.

"உன்கிட்ட பேசனும்"

"எனக்கு வேலை இருக்கு. ப்ளீஸ் என்ன டிஸ்பர்ப் பண்ணாத. "

"இப்ப வரமுடியுமா முடியாதா??"-விக்கி.

மதன் சூழ்நிலைய புரிஞ்சிக்கிட்டான்.

"அவ தான் வரலன்னு சொல்றாள எதுக்கு டிஸ்டர்ப் பண்றீங்க.?"

அவன பார்த்து மொறச்சிட்டே கிளம்பிட்டான்.

"யாரு அது??அண்ணா அண்ணானு சொன்னா மட்டும் பத்தாது"- மதன்.

"நான் லவ் பண்ண பையன் டா.. "

"என்னது?? லவ் ஆ?? எப்ப?? எப்படி தெரியும்??இப்ப ஏன் பேசமாட்ற"

"அது.. ."

என் ஃபோன் அடிக்க ஆரம்பிச்சிருச்சு. புது நம்பர். அவனா தான் இருக்கும்.

"என்ன ???"-நான்

"பரவாயில்லையே டக்குன்னு கண்டுபிடிச்சிட்ட.."

"ஏன் விக்கி இப்படி பண்ற என்னை?? என்ன வேண்டும் உனக்கு இப்ப??"

"உன்கூட பேசனும் வெளில வா.. இல்லனா உங்க வீட்டுல.."

"போதும் சாமி வர்றேன்."

காதலில் விழுந்தேன்!!Where stories live. Discover now