இவ்ளோ தூரம் அம்மா சொன்னதுக்கு அப்புறம் அது தப்புன்னு முடிவு பண்ணி.. .
.
.
.
ஒரு 2 நாள் நல்லாதான் இருந்தேன். ஆனா அதுக்கப்புறம் திரும்ப அவன் நியாபகங்கள் திருட ஆரம்பிச்சது.உலகத்துல பாதி பேர் லவ் பண்றதுக்கு.. இல்ல பண்றதா நினைக்கிறதுக்கு காரணமே கூட இருக்கவங்க தான்.
நல்ல வேளை எனக்கு அப்படி பட்ட தோழின்னு யாரும் இல்ல. அபிய பத்திதான் உங்களுக்கே தெரியுமே.!! நான் திரும்ப மாறினதும் திட்ட ஆரம்பிச்சா.
எங்க அண்ணா கல்யாணத்துக்காக சொந்த ஊருக்கு போக வேண்டியதா இருந்துச்சு. எனக்கு அது திருவிழா தான்.
அங்க என் வேலைய பார்க்க ஆரம்பிச்சேன். அதான் சைட்.. சைட்டு.. கல்யாணம் முடிஞ்சி சாப்பிடுறப்ப அவன் பறிமாரிட்டு இருந்தான்.
அவன் சாப்பிட்டானான்னு தெரில. பக்கத்துல அக்கா உட்கார்ந்திருந்தாங்க . அவங்கள்ட்ட கேட்டேன். உடனே அவங்க சிரிச்சிட்டே..
அவன கூப்பிட்டாங்க.
"விக்கி நீ சாப்பிட்டியான்னு சாரதா கேக்குறா"!
ஐயோ!! அக்கா ..இப்படியா பண்ணுவீங்க. எனக்கு என்ன உளறதுன்னு தெரில.
"அண்ணா, மாமா, நீங்க எல்லாம் சாப்பிட்டீங்களான்னு மொத்தமா கேட்டேன் .ஏன் அக்கா இப்படி? "
அவன் அத பெரிசா கண்டுகிட்ட மாதிரி தெரில . நல்லவேளை!!
அப்புறம் ஒரு சின்ன பிரச்சனையால எங்க அப்பாக்கும் அவங்களுக்கும் வாக்குவாதம் ஆரம்பிச்சிருச்சு. எனக்கு தலையே வெடிக்கிற மாதிரி இருந்துச்சு.
அப்புறம் சில பேர் வந்து பேசி தீர்த்து வச்சாங்க. இதனால என்ன அவாய்ட் பண்ணிருவானோன்னு தான் எனக்கு பயம். பட் . எதும் ஆகல.
அன்னைக்கு நைட் எல்லாம் பேசிட்டு இருந்தோம். அப்ப சாரின்னு கேட்டேன்.
"சாரி"-நான்.
"எதுக்கு???"-விக்கி
"ஈவ்னிங் அப்பா அப்படி பேசினதுக்கு"
VOUS LISEZ
காதலில் விழுந்தேன்!!
Roman pour Adolescentsநாம நினைக்கிற மாறிலாம் நடந்துட்டா வாழ்க்கைல இருக்க சுவாரசியம் போயிரும்.. ஒரு தவறான முடிவு வாழ்க்கைய எப்படிலாம் புரட்டி போடும் அப்படிங்குறதுக்கு.. ஒரு சின்ன உதாரணம் தான் இது.. காதல் . காதல். ன்னு ஓடுரோமே... அதுல அப்புடி என்ன சுகத்த கண்டுட்டோம்.. ப...