நான் சாப்பிட்டேனான்னு கூட கேக்கல. எங்க இருக்கேன்னு கேக்கல. எல்லா லக்கேஜ் துணி கூட நான் தான் எடுத்திட்டு போனேன்.ஆனா நான் என்ன பண்ணேன்னு எனக்கு புரியல.
நான் சென்னைல இறங்குறப்ப மணி 9 . ஒரு டாக்ஸி புடிச்சு வீட்டுக்கு போனேன். வீடு பூட்டி இருந்துச்சு.
எனக்குள்ள ஆயிரம் கேள்விகள்.. வீட்ட பூட்டிட்டு வெளில போயிருக்காரா?? இல்ல இன்னும் வீட்டுக்கே வரலையா???
கால் பட்டன பிரஸ் பண்ண ஆயிரம் முறை முயற்சி பண்ணேன். பொறுத்து பொறுத்து பார்த்தேன். மணி10.30 பயம் அதிகமாச்சு.
எம்புட்டு இருக்குது ஆசை. உன்மேல அத காட்ட போறேன்...
அவரோட டயலர் ட்யூன்.
ம்ச்..
எடுக்கவே இல்ல..
.
.
.
சீ சீ.. இல்ல சாரா.. அவருக்கு ஒன்னும் ஆகாது..எங்கையே ஒரு ஓரத்துல பயம் இருந்திட்டே தான் இருந்துச்சு.
அரவிந்த் அண்ணா கால் பண்ணாங்க..
"அ.. அண்ணா.. எப்படி இருக்கீங்க?"
" நான் நல்லா இருக்கேன் மா. எங்க இருக்க?? கல்யாணம் நல்ல படியா முடிஞ்சிருச்சா??"
"ஆஆ. ம்ம்.. முடிஞ்சிடுச்சு ணா. அவர் அங்க இருக்காரா?? சாப்பிட்டாரா??"
" ம்ம். சாப்பிட்டு இப்பத்தான் தூங்கினான். அதான் உன் ஃபோன எடுக்கல. நீ எப்ப கிளம்புற??"
"ம்ம்.. நான் இங்க தான் ணா இருக்கேன். அவர காணோமேன்னு ஃபோன் பண்ணேன். "
" இங்கையா?? தனியாவா?? சாப்பிட்டியா??"
"ஆஆ. சாப்பிட்டேன்.ணா. சரி அவர்.பொறுமையா வரட்டும். நான் பக்கத்து வீட்டுல இருக்கேன். " சொல்லி முடிக்கிறதுக்குள்ள என் கண்லாம் கலங்கிடுச்சு.
" சார." ஃபோன கட் பண்ணிட்டேன்.
வீட்டுக்கு சைடுல ஸ்டெப்ஸ் இருக்கும் அதுல தான் உட்கார்ந்து இருந்தேன்.எப்ப தூங்கினேன்னு தெரில.
திடீர்னு முழிச்சு பாத்தேன். அவர் நின்னுட்டு இருந்தார்.
YOU ARE READING
காதலில் விழுந்தேன்!!
Teen Fictionநாம நினைக்கிற மாறிலாம் நடந்துட்டா வாழ்க்கைல இருக்க சுவாரசியம் போயிரும்.. ஒரு தவறான முடிவு வாழ்க்கைய எப்படிலாம் புரட்டி போடும் அப்படிங்குறதுக்கு.. ஒரு சின்ன உதாரணம் தான் இது.. காதல் . காதல். ன்னு ஓடுரோமே... அதுல அப்புடி என்ன சுகத்த கண்டுட்டோம்.. ப...