வர்ற வழியில மதன பத்தி நினைச்சிட்டே வந்தேன். என்ன பத்தி யோசிச்சிருப்பானா?? இல்ல நான் அவன்ட்ட வழியிறதா நினைச்சிருப்பானா?? .. ஒன்னும் புரியல.. இத பத்தி சாராட்ட சொல்லவும் பயமா இருக்கு. திட்டுவாளா??ஓட்டுவாளா??ஒன்னும் புரியாம இந்த லூசு பய புலம்ப வச்சிட்டானே...
இவ்ளோ நேரம் தூங்கிட்டு இருந்த என் மூளை இப்ப பேச ஆரம்பிச்சது..
அவன் லூசா?? நீ லூசா??
சற்றே கடினமான கேள்வி..
சட்டுன்னு என்ன யாரோ ஃபாலோ பண்ற மாதிரி இருந்துச்சு.. திரும்பி பார்த்தேன்..
அவனே தான்.. என் உள் மனசு கதற ஆரம்பிச்சிருச்சு.. என்ன பண்றதுன்னு புரில .. வேகமா நடக்க ஆரம்பிச்சேன்.
கொஞ்சம் வேகமா நடந்து என்ன புடிச்சிட்டான்..
" மதி, நில்லு... "
" என்ன வேண்டும் உனக்கு??"
" எவ்வுளவு நாள் தான் டீ உன் பின்னாடி சுத்துறது?? இன்னிக்கு ரெண்டுல ஒரு முடிவு தெரிஞ்சாகனும்.. "
" நானும் எத்தனை தடவ தான் டா சொல்லுறது. உன்னை மாதிரி ஒரு ரவுடிய நான் எப்பவும் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்.. "..
அவன் பேரு செல்வம் ங்க.. எங்க ஊருல பெரிய கந்துவட்டிக்காரன் .. மனசாட்சியே இல்லாம நடக்குறவன்.. ஆனா இந்த ஒரு மாசமா சும்மா பின்னாடி பின்னாடி வந்து தொல்லை பண்றான்.. கல்யாணம் பண்ணிக்க சொல்லி.. எதுமே புரில!! சாரா வும் ரெண்டு தடவ அவன கேவலமா திட்டிட்டா!!
ம்ச்.." நீ கல்யாணம் பண்ணிதான் ஆகனும்.. உனக்கு வேற வழி இல்ல புரிஞ்சிக்கோ!எனக்கு நீ கடமை பட்டிருக்க.."
" டேய்.. என்ன டா வேணும் உனக்கு?? இன்னொருதடவ இந்த மாதிரி தொந்தரவு பண்ணா செருப்பு பிஞ்சிரும்.. ராஸ்கல்.. "
" மரியாதை கெட்டுறும் டீ.. இன்னிக்கு நீ என்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லுற.. "
வந்த கோபத்துக்கு அறை விடனும் போல இருந்துச்சு . நடு ரோடுங்குறதுனால அமைதியா இருந்தேன்.
YOU ARE READING
காதலில் விழுந்தேன்!!
Teen Fictionநாம நினைக்கிற மாறிலாம் நடந்துட்டா வாழ்க்கைல இருக்க சுவாரசியம் போயிரும்.. ஒரு தவறான முடிவு வாழ்க்கைய எப்படிலாம் புரட்டி போடும் அப்படிங்குறதுக்கு.. ஒரு சின்ன உதாரணம் தான் இது.. காதல் . காதல். ன்னு ஓடுரோமே... அதுல அப்புடி என்ன சுகத்த கண்டுட்டோம்.. ப...