"சாரதா!!ஒரு நிமிஷம் நில்லு!"
வீட்டுக்கு போற வழில ஒரு குரல். பயந்துட்டே திரும்பினேன். சூர்யா சார் தான். சாரும் இல்ல மோரும் இல்ல.. சூர்யா தான்.
"என்ன சார்??"
"சாரி"
"எதுக்கு சார்????"
"காலையில அப்படி பேசினதுக்கு."
"பரவாயில்ல . விடுங்க. நீங்க சொன்னதும் கரக்ட்டுதானே. நான் தான் லிமிட்டோட நடந்திருக்கனும். "
"ஹே!! உன்ன ஹர்ட் பண்ணதுக்கு சாரி. உன் ஃபிரண்டு தான் வந்து லெஃப்ட் அன்டு ரைட் வாங்கிட்டா. ஐம் சாரி. நீ ஏதோ குடும்ப சூழ்நிலையாலதான் இங்க வர்க் பண்றதாகவும் நீ எம்.பி.பி.எஸ் படிச்சதாவும் சொன்னாலே!"
இவளுக்கு கொஞ்சம் கூட அறிவில்லைங்க. எல்லாத்துக்கிட்டையும். பன்னி.
"சார். அதெல்லாம் ஒன்னுமில்லை. நீங்க எதும் நினைச்சிக்காதீங்க. நானும் சாரி கேக்கனும். யாரா இருந்தாலும் கோவம் வரதான் செய்யும். "
"ரொம்ப தாங்க்ஸ்.. ஃபார் மேக்கிங் மீ ஃபீல் கம்ஃபர்டபிள். "-சூர்யா.
"பரவாயில்ல சார். ஆனா ஒரே ஒரு டவுட். நீங்க குடிகாரன் மாதிரி லாம் தெரில . ஆனா ஏன் இவ்ளோ குடிக்கிறேங்க.??"
"அடக்கடவுளே !! என்ன குடிகாரன்னு பிரான்டே பண்ணிட்டியா??"
"ஐயோ சார்.. தப்பா நினைக்காதீங்க. ஒரு சிலர பார்த்தாலே தெரியும்ல . அதான் கேட்டேன்.!!"
"ஹா.. ஹா.. ம்ம் உன் கெஸ் கர்க்டுதான். குடிக்க மாட்டேன். பட்.. உன்கிட்ட சொல்ல என்ன?? லவ் ஃபெயிலியர் அதான். "
"அப்ப நானெல்லாம் டன் கணக்குல குடிக்கனுமே சார். "
"நீயுமா?? சூப்பர்... சூப்பர். எத்தன வருஷம்??"
"அட ஏன் சார் கடுப்ப கிளப்புறீங்க?? ஒன் சைடு தான். "
" சாரதா.. நமக்குள்ள ஏதோ ஒற்றுமை இருக்கு போல.."
சொல்லிட்டு இருக்கும்போதே மதி கால் பண்ணிட்டா..
"சொல்லு மதி.. ம்ம்ம்.. இதோ வந்துட்டேன் டீ"
ஃபோன்ல பேசினதும் அவர்கிட்ட பேசினேன்.
YOU ARE READING
காதலில் விழுந்தேன்!!
Teen Fictionநாம நினைக்கிற மாறிலாம் நடந்துட்டா வாழ்க்கைல இருக்க சுவாரசியம் போயிரும்.. ஒரு தவறான முடிவு வாழ்க்கைய எப்படிலாம் புரட்டி போடும் அப்படிங்குறதுக்கு.. ஒரு சின்ன உதாரணம் தான் இது.. காதல் . காதல். ன்னு ஓடுரோமே... அதுல அப்புடி என்ன சுகத்த கண்டுட்டோம்.. ப...