சாரதாவின் கூற்று:
ஏதோ சத்தம் கேக்கவும்.. பயந்து எழுந்தேன்.
பெரிய பெருச்சாளி தான் உட்கார்ந்திருக்கு..
இவர் எப்படி இங்க??
மன்னிக்கவும் எனக்கு அம்னீஷியா. தூங்கி எழுந்ததும் டக்குன்னு எதும் ஞாபகம் வரல..
ஆனா இப்ப வந்திடுச்சு. கப்புன்னு கவலை கட்டி பிடிச்சிகிச்சு.
"குட் மார்னிங் மாடம்!!"-சூர்யா.
"வீட்டுக்கு போகலையா??"-நான்.
"போயிட்டு வந்துட்டேன் டீ. இந்தா .. "-சூர்யா.
டீ போட்டிருக்கார்.
"எழுப்பிருந்தா நான் போட்டிருப்பேன்ல. லூசு.. "
"ரொம்ப டயர்டா இருப்ப . அதனால நல்ல தூங்கிட்டு இருந்தா. டிஸ்டர்ப் பண்ணவேண்டாமேன்னு தான் எழுப்பல. "
"தாங்கஸ்.. எல்லாத்துக்கும். "-நான்.
"இப்ப நான் குடுக்க போற கிஸ்கும் சேர்த்தா??"-சூர்யா.
"நீங்க இருக்கீங்களே!!.. என்ன பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததுக்கு சொன்னேன்."-நான்.
அத பத்தி நான் யோசிக்க கூடாதுன்னு தான் இப்படி பேசுறாரு.
"முதல்ல டீய குடிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லு "-சூர்யா.
சுவத்துல சாஞ்சி உட்கார்ந்திருந்தேன். அவர் எனக்கு எதிரே சேர்ல உட்கார்ந்திருந்தார்.
"ம்ம்.. ஏதோ நல்லா தான் இருக்கு.. "
உண்மையிலையே சொல்லனும்னு சொன்னா .. சூப்பரா இருந்துச்சு.
"அடேங்கப்பா.. ரொம்ப தான் பெரிய மனசு உங்களுக்கு.. "-சூர்யா
அப்புறம் எதோ ஃபோன் யூஸ் பண்ணிட்டு இருந்தார்.
இவ்ளோ கேரிங்கா எப்படி ஒரு மனுஷனால இருக்க முடியும்னு பார்த்திட்டு இருந்தேன்..
டக்குன்னு என்ன பார்த்தவர்..
"என்னடி??"-னு கேட்டார்.
"ஒன்னுமில்லையே"-நான்.
திரும்ப கொஞ்ச நேரத்துலையே என் கண்கள் ஏனோ அவர் பக்கமே திரும்பிடுச்சு.
YOU ARE READING
காதலில் விழுந்தேன்!!
Teen Fictionநாம நினைக்கிற மாறிலாம் நடந்துட்டா வாழ்க்கைல இருக்க சுவாரசியம் போயிரும்.. ஒரு தவறான முடிவு வாழ்க்கைய எப்படிலாம் புரட்டி போடும் அப்படிங்குறதுக்கு.. ஒரு சின்ன உதாரணம் தான் இது.. காதல் . காதல். ன்னு ஓடுரோமே... அதுல அப்புடி என்ன சுகத்த கண்டுட்டோம்.. ப...