மதி:
" சத்தியமா சொல்றேன். இவ என்ன பண்ண போறான்னே புரில டா. வர்ற கோவத்துக்கு.."-நான் தான் கத்திட்டு இருந்தேன்.
பின்ன என்னங்க.. காலையில எழுந்திரிக்கிறப்ப ராஜிய காணோம். அவங்க அம்மா வீட்டுக்கு போறேன்னு எழுதி வச்சிட்டு போயிட்டா. அவ்வளவுதூரம் நேத்து படிச்சு படிச்சு சொல்லிருக்கேன். அப்படி என்ன ங்க நம்பிக்கை இல்லாம போயிடும் ஒருத்தர் மேல!!
ஃபோன் பண்ணா கட் பண்றாங்க மேடம்.
" டேய் எல்லாரையும் பத்தி யோசிச்சு யோசிச்சு எனக்கு மண்டை வலிக்கிது. முதல்ல எனக்கு வேலை வாங்கி தா. நான என்ன பத்தி மட்டும் யோசிக்க போறேன். "
.
.
முதல்ல திட்டினாங்க.. சொல்லாம கொல்லாம வேலைய விட்டு நின்னதுக்கு. அப்புறம் ஏதோ பெரிய மனசு பண்ணி வர சொன்னாங்க. அடுத்த நாள்ல இருந்து போகலாம்னு முடிவு பண்ணிட்டேன்.ராஜி:
" அப்பா .. ரொம்ப சாரி பா. இவ்வளவு நாள் வந்து பார்க்காததுக்கு. நான் என்ன பண்றேன்னே எனக்கு புரில. "
" பரவாயில்லை மா. நீ ஷங்கர்கூட சந்தோஷமா வாழ்ந்தா போதும் டா. எப்படி இருக்க??"- அப்பா.
என்ன இவரு?? வரன் பார்திட்டேன்னு எங்க அம்மா சொன்னாங்க .அப்ப எல்லாம் அப்பாக்கு தெரியாம அவங்க பார்த்து இருக்க பிளான் போல.
" ஆஆ.. நல்லா தான் பா இருக்கேன். அம்மா எங்க பா?"
உள்ள இருக்காங்கன்னு கேட்டு தெரிஞ்சதும..
" அப்பாக்கு தெரியாம இதெல்லாம் பண்ற அளவுக்கு .. உனக்கு எப்படிமா தைரியம் வந்துச்சு. ?" நான்.
" ராஜி!! வா வா.. எப்படி கண்ணு இருக்க?? "
" நான் கேட்டதுக்கு பதில் சொல்லு முதல்ல.. "
" என்ன ஆச்சு ராஜி.. என்ன பதில் சொல்லனும் உங்க அம்மா??"- அப்பா வந்தார்.
எல்லாத்தையும் நானே சொன்னேன். தெரியும் அப்பாக்கு வருத்தமா இருக்கும் என் லைஃப நினைச்சு.
என் மேல தப்பே இல்லன்னு சொல்லல.. எல்லாமே சொல்லி முடிச்சேன்.
YOU ARE READING
காதலில் விழுந்தேன்!!
Teen Fictionநாம நினைக்கிற மாறிலாம் நடந்துட்டா வாழ்க்கைல இருக்க சுவாரசியம் போயிரும்.. ஒரு தவறான முடிவு வாழ்க்கைய எப்படிலாம் புரட்டி போடும் அப்படிங்குறதுக்கு.. ஒரு சின்ன உதாரணம் தான் இது.. காதல் . காதல். ன்னு ஓடுரோமே... அதுல அப்புடி என்ன சுகத்த கண்டுட்டோம்.. ப...