மணி 5.30 ஆச்சு.. நா சும்மா பக்கத்துல இருந்த பொண்ணோட பேசிட்டு இருந்தேன்.அப்ப தான் எனக்கு ராஜி நியாபகம் வந்துச்சு.. அதுக்காக நா காலைல இருந்து அவள நினைக்கலன்னு நினைக்காதீங்க!! அவ இன்னிக்கு வராததுக்கு கடவுள் கிட்ட நன்றி சொல்லிட்டு இருந்தேன்.சரி மதிக்கிட்ட கேக்களாம்னு மாடிக்கு போனேன்..அவளும் நானும் எப்பவும் ஒன்னாதான்ங்க வர்க் பண்ணுவோம். ஆனா இன்னிக்கு அந்த பக்கி கோவத்துல ஆளா மாத்தி விட்டுட்டு போயிட்டா..
மாடிக்கு போனப்ப மதனும் , மதியும் பேசிட்டு இருந்தாங்க. நான் போய் ரெண்டு பேருக்கும் ஒரு பெரிய ஹாய் சொன்னேன்.
எப்படியும் நான் விளக்கம் சொல்றவரைக்கும் மதி என்கிட்ட பேசப்போறது இல்லன்னு எனக்கு நல்லாவே தெரிஞ்சிருச்சு.. ஸோ அவகிட்ட பேசி.. ஏன் என் எனர்ஜிய வேஸ்ட் பண்ணுவானேன்னு மதன் கிட்ட பேசினேன்.." ராஜி எங்க மதன்??காலைல இருந்து காணோம்??"
" உனக்கும் மதிக்கும் பெரிய சண்டை போல"
மதி அவன் தோள்ல குத்தினா..
" லூசு.. நான் எத பத்தி பேசுறேன் ?? நீ எத பத்தி கேக்குற?? - நான்.
" இல்ல.. ராஜி அப்பாக்கு உடம்பு சரி இல்லன்னு காலைலயே ஃபோன் வந்திருக்கு.. அவளும் கிளம்பி போயிட்டா.. இப்ப வந்து ராஜி எங்கன்னு கேக்குற??"
எனக்கு பயங்கரமா கோவம் வந்துச்சு.. இல்ல தெரியாம கேக்குறேன் அந்த அளவுக்கா நா வேண்டாதவளா போயிட்டேன்?? எங்களுக்குள்ள இதுக்கு முன்னாடி கூட சண்டை வந்திருக்கு. பட் என்னைக்கும் எதையும் யாரும் மறைச்சது இல்ல..
மதி அவன பார்த்து ,
" ஏன்டா உனக்கு இந்த தேவையில்லாத வேலை "ன்னு திட்டுனா.இதுக்கு மேல அங்க இருந்தா எனக்குதான் அசிங்கம்னு தோனுச்சு. நகர்ந்துட்டேன்.. அப்புறன் ஏதோ தோனுச்சு திரும்ப வந்து..
" மதன், நா கிளம்புறேன். அவள்ட்ட சொல்லிரு.. வீட்டுக்கு வர லேட் ஆகும்.. இதையும் சொல்லிரு.. பை..!!"
ВЫ ЧИТАЕТЕ
காதலில் விழுந்தேன்!!
Подростковая литератураநாம நினைக்கிற மாறிலாம் நடந்துட்டா வாழ்க்கைல இருக்க சுவாரசியம் போயிரும்.. ஒரு தவறான முடிவு வாழ்க்கைய எப்படிலாம் புரட்டி போடும் அப்படிங்குறதுக்கு.. ஒரு சின்ன உதாரணம் தான் இது.. காதல் . காதல். ன்னு ஓடுரோமே... அதுல அப்புடி என்ன சுகத்த கண்டுட்டோம்.. ப...