ஏப்ரல் 14 என் கணவரின் பிறந்தநாள். அவருக்காக வடித்த கவிதை தான் இது...
"பெற்றவரின் துணையோடு
உற்றவரை கரம் பிடித்தேன்...அன்றே!
அன்பான இல்லத்தில்
அடியெடுத்து வைக்கும் முன்னரே
அபிப்பிராயம் கேட்டவரல்லவா நீர்...??பிடிக்கும் என்று ஒரு சொல்
என் இதழினில் உதிர்த்தாலும்...
அப்பொருள் என் கைசேரும் முன்
உறக்கமென்பதை மறக்குமல்லவா
உன் விழிகள்...எப்பிறவியில் செய்த பலனோ
என் அன்பின் அலையாய்....
என் இதயத்தின் ்...
என் விழிகளின் கனவாய்...
என்று வந்தாய்
என் வாழ்வின் வரமாய்...
வசந்தத்தின் தென்றலாய்
என் வாழ்வில் நீ வந்தாய்.....உன் விரல்களை பிடித்த நாள் முதலாய்
தெவிட்டாத இன்பமாய் வளம் வர....இதோ இன்று என் அன்புக்குரியவனின் பிறந்தநாள்....காண ஓடோடி வந்தேன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... மாமா ...
Happy birthday to you...dear.... "ஆனால் இதை வெளியிட முடியவில்லை... அதோடு அவரின் பிறந்தநாளுக்காக தான் "நெருங்க சொல்லுதடி உன்னிடம் 2" ஆரம்பிக்க முதல் அத்யாயம் எழுதி, அன்று வெளியிட தயாராக வைத்திருந்தேன்.
சகோதரி ஒருவர் கூறினார். "இன்னும் இந்த கதையே முடியவில்லை இதிலேயே இரண்டு ஜோடிகள் இருக்க இன்னும் இதுவே சரியாக புரியவில்லை. சரி ஆரம்பியுங்கள் கதை புரிந்தால் சரி தான்" என்று.
சுருக்கென்று இருந்தது எனக்கு.
அவரின்சொற்கள் பலித்தது போல ஏப்ரல் 14 அன்றே என் கணவருக்கு "chicken pox" போட்டுவிட்டது. அதோடு இன்று வரை என்னால் மொபைலை கையில் கூட தொட முடியவில்லை. கூடிய சீக்கிரம் "உன் விழிச்சிறையினில் " பதிவோடு வருகிறேன்.
இந்த கதையை முடித்த பிறகு "நெருங்க சொல்லுதடி உன்னிடம் 2" போடுகிறேன்.
பொறுமையோடு காத்திருக்கும் அனைத்து சகோதர சகோதிரிகளுக்கும் என் நன்றி.
இந்த பதிவிற்கு வோட்ஸ் , கமெண்ட்ஸ் எதுவும் தேவையில்லை....
ரோஜா!
நிச்சயமாய்
நீ அழகு தான்...
பட்டுபோல் மென்மை தான்...ஆனாலும்,
என்னவளின்
பட்டு கன்னத்திற்கும் ...
பனி இதழுக்கும்..
மலர் பாதத்திற்கும்.. முன்
நீ தோற்பதென்னவோ
உண்மை தான்..