உன்
விழியினை
நோக்க முடியாமல்
நிலம் நோக்கி நின்றேன்...
நாணத்தோடு
உன் முன்னால்...என்
முகம் மட்டும் பார்த்து
மற்றவர்காக
அங்கும் இங்கும்
விழியை சுழலவிட்டாயடா
அவர்களை திசைதிருப்ப...விரல் தீண்டல் இல்லை...
மெய் தீண்டல் இல்லை...
முதல் பார்வையில்
உன் விழிதீண்டலால்
என்
உயிர்கொண்டு
சென்றாயடா...அன்று
விழுந்தவள்
இன்னும் எழவில்லை...
உன்
கண்ணக்குழியிலிருந்து...
இன்றும் இழக்கின்றேன்
என்னை
உன் இதயகுழியில் மனைவியாய்...
