"என்னவளே!
உன்
அன்பு கலந்த பார்வை
இல்லையென்றாலும்
அனல்தெறித்த பார்வையாவது
வேண்டும் எனக்கு!
உன்
காதல் மிகுந்த
வார்த்தை தான்
இல்லையென்றாலும்
அமிலம் கலந்த
வார்த்தையாவது
வேண்டும் எனக்கு !
நீ
என்னை பார்க்காவிட்டாலும்
நீ என்னை
கடந்து செல்கையில்
நான் உன்னை
காண விரும்புகிறேன்,
அன்பே!"
-,தர்ஷினிசிதம்பரம்
