"பெண்ணுக்கு!
ஆயிரம் குற்றம் குறைகள்
கணவன்வீட்டில் சுமத்தினாலும்
இதயம் வலித்தாலும் வாய்பொத்தி
நம் கணவரின் சொந்தம் நம் சொந்தம்
என்று எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்து மீண்டும் சகஜமாக பேசி சிரித்து வாழவேண்டும்!ஆணுக்கு!
பெண்ணை பெற்றவர்கள்
பெண்ணுக்கு எல்லாவற்றையும் செய்தும்
பெண்ணிண் வாழ்வுக்காக
எல்லா விஷயத்திலும்
எவ்வளவு தலை தாழ்த்தமுடியுமோ
அவ்வளவு தாழ்த்தினாலும்
பணிவோடு கவனித்தாலும்
உன்னை பெற்றவர்களுக்கு
மாப்பிள்ளையிடம்
எப்படி நடந்துகொள்ள வேண்டும்
என்று தெரியவில்லை என்பார்கள்!"
- தர்ஷினிசிதம்பரம்
