****3****

7.3K 208 7
                                    

நான் தரும் முதல் வேலை இனி நீ என் முன்னால் சார் என்ற வார்த்தையை உபயோகிக்க கூடாது என்றான்.
சார்... என்று இழுத்தவளை முதல் வேலையையே ஒழுங்காக செய்யவில்லை. கவனத்தில் கொண்டீர்களா இல்லையா என்றான். சரி போகட்டும் முதல் முறை என்பதால் இரண்டாம் வாய்ப்பு தருகிறேன் என்றான்.
உங்களை அழைப்பதானால் நான் எவ்வாறு அழைப்பது சா... என்று சொல்ல வந்தவள் சொல்லாமல் விழுங்கினாள்.
27 வருடங்களாக என்னை க்ரித்திக் என்று தான் அழைத்தார்கள் என்று சிரித்தான்.ஐ.டி நிறுவனங்களில் எல்லாம் பெயர் சொல்லித்தான் அழைப்பார்கள் தெரியுமல்லவா என்றான்.
அவளும் நான் என்ன ஐ.டி யிலா வேலைக்குச் சேர்ந்தேன் என்று முனுமுனுத்துக் கொண்டே சரி நான் வாங்க போங்கனு கூப்பிடறேன் என்றாள்.
அப்டியா சரி ஆனால் வெளியில் நீ வாங்க என்று கூப்பிட்டு யாரை கூப்பிட்றனு புரியாம பாக்றவன்லாம் வந்து நின்னா என்ன பன்றதுன்னு யோசிச்சுக்கோ என்றான் சிரித்துக் கொண்டே. அலுவலகம் சின்னது என்றாலும் மூன்று இடங்களில் க்ரித்திக் தனது நிறுவனத்தை உயர்த்தி இருந்தான். வெளியில் பேசாமல் இருக்க வாய்பே இல்லை என்று யோசித்துவிட்டு ஓகே க்ரித்திக் என் முதல் வேலையை முடித்துவிட்டேன் என்றாள் புன்னகையோடு.
தட்ஸ் பெட்டர் மது. வாங்க மற்ற வேலை ஆட்ளையும் மற்ற இரண்டு அலுவலகத்தின் அதிகாரிகளையும் அறிமுகம் செய்கிறேன் என்று அழைத்துச் சென்றான்.
அன்று பெரிதாக வேலை ஒன்றும் இல்லை ஆனாலும் பயணத்தினால் கொஞ்சம் களைப்பாகி இருந்தாள். மதிய உணவு அவனுடன் சாப்பிட நேர்ந்ததால் சீக்கிரம் சாப்பிட்டாக வேண்டுமே என்று சிறிதளவு மட்டும் சாப்பிட்டு பசியில்லை என்று எழுந்துவிட்டாள். மதியத்திற்க்கு மேல் அலுவலகத்தில் உள்ளவர்களிடம் வேலை பற்றி கொஞ்சம் அளவளாவி விட்டு வந்தாள். மாலை ஐந்து மணி ஆனதுமே க்ரித்திக் மது கிளம்பலாமா என்றான். அவள் விழித்து நோக்க வீட்டிற்க்கு தான் என்றான் சிரித்துக் கொண்டே. நான் உங்கள் வீடு இருக்கும் வழியாகத் தான் செல்கிறேன் வாங்க ட்ராப் பன்னிடுறேன் என்றான். அவள் இல்லை க்ரித்திக் நானே போய்டுறேன் என்றாள்.
அட அந்த வழியா போறப்போ விடப்போறேன் இதுக்கு ஏன் தயங்குறீங்க என்று கேட்டான்.
  
இல்லை க்ரித்திக் வெளில கொஞ்சம் வேலை இருக்கு அதான்.... என்றாள்.
        சரி ஓகே பரவாயில்லை மது டேக் கேர் பாய் என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.
        அவன் கிளம்பியதும் அலுவலகத்தில் வேலை செய்யும் மையூரா மதுராவிடம் வந்து என்னங்க சிடுமூஞ்சி ட்ராப் பன்றேனு சொல்லுது நீங்க வரலேனு சொல்றீங்களே..?
         சிடு மூஞ்சியா யாரை சொல்கிறாள். ட்ராப் என்று சொன்னாளே அப்ப நிச்சயம் க்ரித்திக்கை தான் கூறுகிறாள். சிடு மூஞ்சியா.... நாள் முழுவதும் புன்னகைத்தவாறே இருந்தானே, அவன் பேச்சு கவரும் வண்ணம் எவ்வளவு இனிமையாய் இருந்தது. அவனைப் போயா சிடுமூஞ்சி என்று சொல்வது என்று கோபப்பட்டாள்.
  அதற்குள் ஓரே நாளில் அவனைப் பற்றி என்ன தெரிந்து கொண்டாய் என்று அவனுக்காக கோபப்படுகிறாய் என்று தன்னைத் தானே கடிந்து கொண்டாள்.
       அந்த மயூராவை பார்த்து இல்லைங்க நிஜமாவே வேலை இருக்கு என்றாள். ஆமாம் நீங்கள் ஏன் அவரை சிடு மூஞ்சி என்கிறீர்கள் என்று கேட்டாள்.
          இப்போதுதானே வந்திருக்க மதுரா போக போக நீயே தெரிஞ்சுப்ப, அதுவும் பி.ஏ வேற நிச்சயம் நிறைய வாங்குவ அப்பலாம் வா நாம ரிலாக்ஸ் பண்ணிக்கலாம் என்றாள் நக்கலாக. இவளும் ஒருவாறு தலையாட்டி விட்டு கிளம்பினாள்.
             உண்மையிலேயே வேலை ஒன்றும் இல்லை. ஆனால் ஒரு ஆணுடன் வெளியில் சென்று அவளுக்கு பழக்கம் இல்லை. ஆணுடன் என்ன பெண் தோழிகளுடன் கூட வெளியில் சென்றது இல்லை. மதுராவிற்க்கு மிக நெருங்கிய தோழிகள் என்றால் அவள் அம்மா அக்கா, அத்தை, தங்கை மட்டும் தான். அவர்களுடன் மட்டும் தான் வெளியில் சென்றிருக்கிறாள். அதனால் வேலை என்று சொல்லி போக மறுத்துவிட்டாள். பேருந்தில் பயணம் என்றால் மதுராவிற்க்கு சலிப்புதான். ஆனாலும் குடும்ப சூழ்நிலைக்காக எதையும் செய்ய தயாராகி இருந்தாள். பேருந்தில் ஜன்னல் ஓர இருக்கை கிடைக்கவும் கொஞ்சம் நிம்மதியாகினாள். இன்று அலுவலகத்தில் நடந்ததை எல்லாம் யோசித்தவாறு ஜன்னல் வழியே தெரிந்த இயற்க்கை அழகை ரசித்தவாறே வந்தாள்.
           இடையிடையே க்ரித்திக் இளம் வயதிலேயே இவ்வளவு சாதித்திருக்கிறானே என்று வியந்து கொண்டிருந்தாள்...

'பூ' கம்பமாய் வந்த பூகம்பம்Where stories live. Discover now