நாட்கள் உருண்டோடியது....
புது உறவுகள், க்ரித்கிக்கின் பாசம் மற்றும் அளவற்ற காதலில் மதுராவின் வாழ்க்கை வெகு அழகாக மாறி இருந்தது. ஒவ்வொரு நிமிடங்களையும் அணு அணுவாய் ரசித்தாள். அலுவலகம் வீடு என க்ரித்திக் அருகிலேயே இருந்தாள். அவனது அறைக்குள்ளேயே அவளுக்கும் இருக்கை. அவளது சந்தோஷம் அளவில்லாமல் போனது. சண்டைகள் இல்லாத வாழ்க்கை ருசியற்றது என்பதைப் போல சின்ன சின்ன சண்டைகளும் அதை சரி செய்யும் பொழுது அதிகரிக்கும் அன்பும், அடுத்த சண்டையை எதிர் பார்க்க வைத்தது இருவரையும். க்ரித்திக்கின் எண்ணங்களை அவன் கூறாமலே அவள் புரிந்து கொண்டாள். அதே போல் தான் அவனும் இருந்தான். வார்த்தைகளே அவர்களுக்குள் தேவையில்லாமல் போனது. அவளது மாமியாரோ முழுதாக அம்மாவாக மாறி இருந்தார். க்ருபாவையும், மதுராவையும் வேறுபாடின்றி பார்த்தார். இப்படியே நாட்கள் பறக்க... ஒருநாள்..க்ரித்திக்...
ம் சொல்லு மது...
நான் ரொம்ப டயர்டா இருக்கேன். ஸோ நான் வீட்டிற்குச் செல்கிறேன். நீங்க வொர்க் முடிச்சுட்டு வாங்க..
ஏன் மது... காய்ச்சல் அடிக்குதா என்று நெற்றியை தொட்டுப் பார்த்தான்.
அதெல்லாம் ஒன்றுமில்லை க்ரித்திக். பீலிங் டயர்ட் தட்ஸ் இட்.
ம் ஓகே மது. நீ கார்ல போ. நான் பைக்ல வந்திடறேன்.
சரி க்ரித்திக் பை...இரண்டு அடி எடுத்து வைத்தவள் மறுபடி திரும்பினாள்.
புரிந்தவனாய்... மெதுவாக தான் வருவேன் மது. ஸ்பீடா பைக் ஓட்ட மாட்டேன். ப்ராமிஸ்...
புன்னகையுடன் விடை பெற்றாள்.
வேலையை முடித்து கிளம்புவதற்கு இரவு 9 ஆகி இருந்தது. மது களைப்பில் உறங்கி இருப்பாள் என்று யோசித்துக் கொண்டே வண்டியை மெதுவாக ஓட்டிச் சென்றான். க்ரித்திக்கின் அம்மாவும் பாப்பாவும் கூட உறங்கி போயிருந்தார்கள்.
யாரையும் எழுப்ப மனமில்லாமல் மெதுவாய் மாடிக்கு வந்து சேர்ந்தான். கதவினை மெல்ல திறந்து உள்ளே வந்து மதுராவைப் பார்த்தான். அமைதியான முகம்... உறங்கும் பொழுது கூட பொலிவுடனும், சாந்தமாகவும் இருக்கின்றாளே.... பார்த்துக் கொண்டே.. ப்ரஷ் ஆகிவிட்டு வந்தான். மதுவின் அருகில் படுத்துக் கொண்டு அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.அப்போது சட்டென அவன் புறம் திரும்பி படுத்தவள் அவன் தோள் மீது கைகளைப் போட்டு, இன்னும் எவ்வளவு நேரம் தான் என்னை பார்த்துக் கொண்டே இருப்பீர்கள் என கேட்டாள்.
ஓய் நீ இன்னும் தூங்கவில்லையா??
ம்.... தூங்கியிருக்கலாம் தான்... ஆனால் முடியவில்லையே...
அப்படியா?
நான் இல்லாமல் தூங்கமாட்டாயா??
அப்படி எல்லாம் கூற முடியாது....
ஓ.... அப்புறம் ஏன் இன்னும் தூங்காமல் இருக்கின்றாய்?
உங்களிடம் பேச வேண்டுமென்று தான்.
ம் ... சொல்லு மது... என்ன விஷயம்?
க்ரித்திக் ஒருவேளை நம் வாழ்க்கையில் நீங்கள் வேறு ஒரு பெண்ணையும் நான் வேறு ஒரு ஆணையும் நேசிக்க நேர்ந்தால்...?
ஹேய்... நிஜமாவா..... வாவ்... சூப்பர்... ஐம் ஸோ ஹேப்பி....
அதிர்ந்து போய்ப் பார்த்தாள் மதுரா.....
YOU ARE READING
'பூ' கம்பமாய் வந்த பூகம்பம்
Romanceமதுரபாஷினி..... ஒரு பெண்னின் வாழ்வில் ஆணின் அவசியமும் ஒரு ஆணின் வாழ்வில் பெண்னின் அவசியமும் பற்றி அழகான காதலின் முலம் கூறும் மதுரபாஷினியின் வாழ்க்கையை இந்நாவலில் பகிருகிறேன்.....