மதுரா அலுவலகத்தில் இருந்த அதே நேரத்தில் மதுராவின் வீட்டில்.....
வாங்க க்ரித்திக்.... உள்ள வாங்க..
அம்மா, அப்பா, இவங்க என்னோட அம்மா.. நாங்கள் உங்களிடம் ஒரு முக்கியமான விசயத்தைப் பற்றி பேசுவதற்காக வந்தோம்.
மதுராவின் தாயும், தந்தையும் ஒன்றும் புரியாது விழித்தனர்.
அம்மா, நீங்கள் பேசுங்கள் அதுதான் சரியும் கூட என்று க்கித்திக் அவன் அம்மாவிடம் பொறுப்பை ஒப்படைத்தான்.
நான் சுற்றி வளைத்து பேச விரும்பவில்லை. நேரடியாகவே கேட்டுவிடுகிறேன். உங்கள் வீட்டு பெண்ணை நான் எங்கள் வீட்டு மகாலட்சுமியாக்கிக் கொள்ள விரும்புகிறேன். பார்த்த நான்கு நாட்களில் இவ்வாறு கேட்பதற்க்கு சங்கோஜமாகத் தான் உள்ளது. ஆனால் ஒரு பெண்ணின் குணமறிய நீண்ட நாட்கள் தேவையில்லை என்று மதும்மா புரியவைத்து விட்டாள். அவளது குணமும் பண்பும் எங்களை மெய்சிலிர்க்க வைத்தது. நான் அப்போதே முடிவெடுத்தேன். என் மகனுக்கானவள் இவள்தான் என்று. என் மனதில் இடம் பிடித்ததைப் போல க்ரித்திக்கின் இதயத்திலும் எளிதாய் நுழைந்துவிட்டாள்.
மதுராவின் தாயும், தந்தையும் ஒன்றுமே புரியாமல் நின்றனர். இவர்கள் என்ன பேசுகிறார்கள் மது இவர்கள் மனதில் இடம் பிடித்தவளா? எப்படி? எப்போது?... எதுவும் புரியவில்லை...
அம்மா கூறுவது உங்களுக்கு புரிய வாய்ப்பில்லை.. என்ன நடந்தது என்று நான் தெளிவாகக் கூறுகிறேன்.
நான் மதுவை முதல் முறையாகக் கோவிலில் தான் பார்த்தேன். அன்று நான் கோவிலில் அம்மாவை விட்டுவிட்டு, சின்ன வேலை நீங்கள் சாமியை வணங்கிவிட்டு அமருங்கள் வந்துவிடுகிறேன் என்று கூறி வெளியே வந்து கொண்டிருந்தேன் அப்பொழுது அவளை கேலி செய்தவர்களை பார்த்து திட்டி கொண்டே என்மீது வந்து மோதிவிட்டு என்னைத் தவறாக நினைத்து திட்டிவிட்டுச் சென்றாள். அவளே கவனிக்காமல் வந்து மோதிவிட்டு என்னை திட்டிவிட்டுச் செல்கிறாளே என்று அவளுக்கு அவள் தவறை உணர்த்திவிட வேண்டும் என்று மறுபடியும் கோவிலுக்குள் சென்றேன்.
YOU ARE READING
'பூ' கம்பமாய் வந்த பூகம்பம்
Romanceமதுரபாஷினி..... ஒரு பெண்னின் வாழ்வில் ஆணின் அவசியமும் ஒரு ஆணின் வாழ்வில் பெண்னின் அவசியமும் பற்றி அழகான காதலின் முலம் கூறும் மதுரபாஷினியின் வாழ்க்கையை இந்நாவலில் பகிருகிறேன்.....