ஒரு ஹோட்டலில் அலுவலக வேலையை பற்றி முழுவதுமாக உரையாடி முடித்தனர். அவளும் வேலையில் இருந்த சந்தேகங்கள் எல்லாவற்றையும் கேட்டு தெரிந்தும் கொண்டாள். பின்னர் மதிய உணவை ஆர்டர் செய்தான். ஆனால் மதுரா நான் ஹான்ட் பாக்கை கொண்டுதான் வந்தேன் என் உணவும் அதில் இருக்கிறது நான் இதையே உண்டுவிடுகிறேன் என்றுவிட்டாள். ஆர்டர் செய்யப்பட்ட உணவுக்காக காத்திருந்த நேரத்தில் உணவை முடித்துவிட்டு உன்னை ஒரு இடத்திற்க்கு அழைத்துச் செல்கிறேன். உன் கேள்விக்கான பதில் அங்கே கிடைக்கும் என்று அவள் மறந்துவிட்டதை அவன் நினைவூட்டினான்.
பராவாயில்லையே ரோபோவை போல சரியாக நினைவில் வைத்திருக்கிறீர்களே.....இவை என்ன பிரமாதம் இதைவிட பல விசயங்கள் புரோகிராம் செய்யப்பட்டுள்ளது..
பார்க்கிறாயா என்று அவன் மொபைலை எடுத்து அவன் கல்லூரி நாட்களில் ரோபோடிக்காக நடித்த வீடியோவைக் காட்டினான்.அவன் நண்பர்களுடன் செய்த குறும்புகளை எல்லாம் படங்களாக காட்டி விவரித்து இருவரும் வெளியில் இருப்பதை மறந்து சத்தமாய் சிரித்தனர்.அதற்குள் ஆர்டர் செய்த உணவுகளும் வந்தன. ஆச்சரியம் என்னவென்றால் அவன் ஆர்டர் செய்தவை எல்லாம் மதுராவின் பிடித்தமான உணவுகள். ஹை! இவையெல்லாம் எனக்கும் பிடித்தமானவை என்றாள்.
அப்போ சரி இருவரும் உணவை பகிர்ந்து உண்ணலாம்.
மதுராவின் அம்மா சாதம், தக்காளி குழம்பு, கொத்து கத்தரிக்கா என ஒரு மினி விருந்தையே அனுப்பி இருந்தார். எல்லாவற்றையும் பார்த்துவிட்டு ஆஹா எல்லாமே பிடித்தவையாக உள்ளதே ஒருபிடி பிடித்துவிட வேண்டும் என்று கண்ணடித்தான். நாளை உடற்பயிற்சி அறைதான் என் அலுவலக அறையாக இருக்கப் போகிறது என்று நினைக்கிறேன்.....
நான் மட்டும் என்னவாம் நாளை நீங்களாவது உடற்பயிற்சி அறையில் அலுவலக வேலையை பார்ப்பீர்கள், நானானால் விடுப்பு எடுக்க வேண்டுமே. எங்கள் எம்.டி அனுமதிப்பாரோ என்னவோ என்று இழுத்து அவனை ஓரக் கண்ணால் பார்த்தாள்.
YOU ARE READING
'பூ' கம்பமாய் வந்த பூகம்பம்
Romanceமதுரபாஷினி..... ஒரு பெண்னின் வாழ்வில் ஆணின் அவசியமும் ஒரு ஆணின் வாழ்வில் பெண்னின் அவசியமும் பற்றி அழகான காதலின் முலம் கூறும் மதுரபாஷினியின் வாழ்க்கையை இந்நாவலில் பகிருகிறேன்.....