மீட்டிங் நல்லபடியாக நடந்து முடிந்தது. க்ரித்திக், மற்ற நிறுவனங்களில் பிரசென்டேசன் பார்த்துவிட்டு அவங்ககிட்ட வெயிட் பண்ணுங்க மற்ற நிறுவனங்களையும் பார்த்துவிட்டு அதிலிருந்து பெஸ்ட் நிறுவனங்களை தேர்வு செய்து அவர்கள் கொடுக்கும் டெண்டர் கொட்டேசன் வைத்துதான் தேர்வு செய்வோம் என்றிருந்தோம். யுவர் கம்பெனி பிரசென்டேசன் வாஸ் ஆவ்ஸம். ஸோ நீங்க கொட்டேசன ரெடி பண்ண ஸ்டார்ட் பண்ணுங்க மிஸ்டர் என்றனர்.
தேங்க்யூ, தேங்க்யூ ஸோ மச்....
லெட்ஸ் கோ பார் லஞ்ச்...
ஸ்யூர், லெட்ஸ் கோ..
மீட்டிங் வந்தவர்கள் அறையை விட்டு வெளியே செல்ல.....
மது....... சக்ஸஸ் என்று இருவரும் கையை தட்டிக் கொண்டனர்.நான் தான் சொன்னேனல்லவா? நிச்சயம் வெற்றி நமக்குதான் பாருங்கள்.
ம்ம்... ஆமா உனக்கும் நம்ம மத்த கொலீக்ஸ்கும் நான் தாங்க்ஸ் சொல்லனும். சரி வா சாப்பிட போகலாம். நமக்காக வெயிட் பண்றாங்க.
ம் எஸ்... லெட்ஸ் மூவ்.
முன்கூட்டியே டேபிள் புக் செய்திருந்தாள் மதுரா. அழகான ஹோட்டலில் அழகான, அமைதியான இடம், சுவையான உணவு என அனைத்தையும் பார்த்து தேர்வு செய்திருந்தாள்.
வந்தவர்கள் உணவை ருசித்து உண்டனர். க்ரித்திக் உங்க கம்பெனில சின்ன சின்ன விசயங்களைக் கூட பார்த்து பார்த்துதான் செய்கிறீர்கள் என்று இந்த லஞ்ச்லயே தெரிகின்றது. இட்ஸ் அமேஸிங்...
தாங்யூ, பட் இவையெல்லாம் மது பண்ணியதுதான். ஸீ ஈஸ் வெரி ப்ரில்லியண்ட் என்றான்.
ஆனால் ரிசப்சனில் ஏன் அந்த வயதானவரை பணியில் அமர்த்தியிருக்கிறீர்? அவரை அனுப்பிவிட்டு பெண்கள் அல்லது 30 வயது ஆண்களை பணியில் அமர்த்துங்கள் என்றார் வந்தவர்களில் ஒருவர்.
ஐ ஆம் ரியலி ஸாரி. ரிசப்சனிஸ்ட் கான எல்லா தகுதிகளும் இருக்கும் அவரை வெளியில் அனுப்ப இயலாது. அதோடு மட்டுமல்லாமல் அவராக விரும்பும் வரை நான் அவரை வெளியில் அனுப்ப மாட்டேன்.
YOU ARE READING
'பூ' கம்பமாய் வந்த பூகம்பம்
Romanceமதுரபாஷினி..... ஒரு பெண்னின் வாழ்வில் ஆணின் அவசியமும் ஒரு ஆணின் வாழ்வில் பெண்னின் அவசியமும் பற்றி அழகான காதலின் முலம் கூறும் மதுரபாஷினியின் வாழ்க்கையை இந்நாவலில் பகிருகிறேன்.....