****29****

4K 139 9
                                    

        ஒரு வெள்ளி குடத்தில் தண்ணீரை நிரப்பி அதை மதுராவிடம் கொடுத்து, இடுப்பில் வைத்துக் கொண்டு மற்றொரு கையில் வெள்ளி குத்து விளக்கில் தீபம் ஏற்றிக்  கொடுத்து உள்ளே வாம்மா என்றழைத்தார் க்ரித்திக்கின் தாயார். க்ருபா நீ குடத்தை ஒரு கையில் பிடிச்சுக்கோ. அண்ணியால தூக்க முடியாது. புடவை வழுக்கும் என்றார்.

        மது எந்த சூழ்நிலையிலும் நான் உனக்குத் துணையாக இருப்பேன். இது நான் உனக்கு கொடுக்கும் மற்றொரு வாக்கு. ஸோ... நானே பிடித்துக் கொள்கிறேன் என்று குடத்தினை முழுமையாக அவனே தாங்கினான்.

       வீட்டிற்குள் வந்ததும் பூஜை அறைக்குச் சென்று குடத்தினை இறக்கி வைத்து, விளக்கினை சாமியின் முன்பு வைத்து சாமி விளக்கு ஏற்றி, உணவு படையலிட்டு அனைவரும் வணங்கினர். பிறகு பொண்ணு, மாப்பிள்ளைக்கு சாப்பாடு போடுங்க என்று ஒரு பெரியவர் கூற,

      அம்மா இப்போ வேண்டும். இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டும். இப்பதானே மது வீட்ல சாப்பிட்டோம்.  அதனால கொஞ்ச நேரம் போகட்டும் அம்மா. மதுவிற்கு வீட்டை சுற்றி காண்பித்துவிட்டு பிறகு சாப்பிட்டுக் கொள்கிறோம் என்றான் க்ரித்திக்.

      அதுவும் சரிதான். மதுரா நீ போயி வீட்டை சுற்றிப் பாரம்மா. கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள். பிறகு சாப்பிட்டுவிட்டு மண்டபத்திற்கு செல்லலாம்.

      சரிங்க அம்மா.

    அண்ணி வாங்க நான் சுற்றி காண்பிக்கின்றேன்.

    ஓய் வாலு... நீ போயி அம்மாக்கு உதவி செய். மண்டபத்திற்கு போகவேண்டும். என்னென்ன தேவை என்று எடுத்துவை. உங்க அண்ணிய நான் பார்த்துக் கொள்கிறேன்.

    ஆமா.... நீங்க தான் முன்னாடில இருந்து பார்த்துக் கொண்டே இருக்கின்றீர்களே... இப்பவுமா.... எதையாவது சொல்லி  என்னை அனுப்பனும் இல்ல...

           ஓய் குட்டி நீ கூட அண்ணாவ புரிஞ்சுக்க மாட்டியா?

         சரி சரி ஐஸ் வைக்க ஆரம்பிக்காதீங்க நான் போயி அம்மாக்கு  ஹெல்ப் பண்றேன். அண்ணி பத்திரமாக இருங்க.... நாம அப்றம் பார்க்கலாம்... ஹியர் லாட் ஆப் டிஸ்ட்ரப்ஸ்...

'பூ' கம்பமாய் வந்த பூகம்பம்Where stories live. Discover now