உறைந்து போயிருந்தாள் மதுரா.
என்ன மது நான் கேட்பதும் சொல்வதும் நியாயம் தானே? இல்லை பேராசைக் கொள்கிறேனா?நிச்சயம் அதிர்ஷ்டசாலி தான்.
யாரைச் சொல்கிறாய்?
உங்களை மணக்கப் போகும் பெண்தான்.
இல்லை மது அப்படி அவள் எனக்கு கிடைத்துவிட்டால் நான் தான் அதிர்ஷ்டசாலி ஆவேன்.
நிச்சயம் கிடைப்பாள், ஆனால் முன்னதாக பார்த்து வைத்ததை போல "அவள் கிடைத்துவிட்டால்" என்றீரே...? என்ன விசயம்...
தோழி உன்னிடம் சொல்லாமலா என்று கண்ணடித்தான்.
அதுவும் சரிதான் என்னை இங்கு பஸ்டாப்பில் விட்டுவிடுங்கள் அலுவலக நேரமே முடிந்துவிட்டது. நான் இப்படியே சென்று விடுகிறேன்.
ஏன் நானே வருகிறேனே காரில் தானே செல்கிறோம் வீட்டிலேயே விட்டு விடுகிறேன்.
இல்லை என் வீட்டிற்க்கு செல்ல ஒரு மணிநேரம் ஆகும். நீங்கள் திரும்ப வந்து வேலையை முடித்து வீடு திரும்ப வெகு நேரம் ஆகும். அதனால நீங்க போங்க நான் பார்த்து போகிறேன்.
சரிமா. பை வில் ஸி.
பை பை என்று சொல்லிவிட்டு இறங்கினாள்.
நேற்று பார்த்த அதே இயற்கை தான், ஆனால் இன்று ஏனோ மனம் அதை ரசிக்க மறுத்தது. அவன் பேசிய வார்த்தைகள் மட்டுமே காதிற்குள் ரீங்காரமிட்டன. அவனது கம்பீரமான முகமும், கள்ளமில்லா சிரிப்பும் தான் கண் முன்னே வந்து வந்து போனது. அன்பு நிறைந்திருக்கும் மனது ஒருநாளும் தவறாக இருக்காது என்று மனதினுள் சொல்லிக் கொண்டாள்.
ஒருமணி நேர பயணத்திற்கு பிறகு வீடு வந்தாள். நன்கு தெரிந்த வழி என்பதால் கால் தானாகவே நடக்கச் செய்தது. ஆனால் அவள் மனமும் நினைவும் அவனை சுற்றி இருந்தது.
அவள் மனதின் தாக்கம் அவளின் செயல்களில் தெரிந்தது. வந்ததும் படபடவென பேசுபவள் இன்று தந்தை அமர்ந்திருந்ததை கூட கவனிக்காமல் சென்றாள். அவள் அறைக்குச் சென்று கதவை தாளிட்டவள் அரைமணி நேரத்திற்கு பின்னே வெளியில் வந்தாள்.ஏய் நம்ம வீட்டு குட்டி ராட்சஸி வெளில வந்துடா பாரு. படையல போட்டு வைச்சுடு இல்ல சாமி ஆடிடுவா என்றார் நக்கலாக.
ஆனால் மதுராவோ எதையும் கவனியாமல் அமைதியாய் இருந்தாள்.
என்னம்மா என்னாச்சு ஏதும் பிரச்சனையா? வேலை பிடிக்கலையா? பிடிக்கலைனா போகாதேமா என்றார்.
வேலைக்கு போக வேண்டாம் என்று சொன்னதை கேட்டு சட்டென திரும்பினாள். அப்பா, நான் உங்களிடமும் அம்மாவிடமும் பேச வேண்டும் என்றாள்.
அம்மா, அப்பா நான் குழப்பத்தில் உள்ளேன். காரணம் க்ரித்திக். அவரை முதன்முறை பார்த்த போது இவ்வளவு சிறு வயதில் இப்படி ஒரு வளர்ச்சியானு ஆச்சரியப்பட்டேன். இன்று ஒரு மனிதனால் இந்த அளவிற்கு அன்பானவராக இருக்க முடியுமா என்று ஆச்சரியப்படுகிறேன். நான் இன்று அலுவலக வேலையாக க்ரித்திக் உடன் வெளியில் செல்ல நேர்ந்தது. அப்பொழுதுதான் அவரை பற்றி தெரிந்து கொண்டேன் என்று நடந்ததை முழுவதுமாக கூறினாள். ரியலி ஐ வாஸ் இம்ப்ரஸ்டு. ஐ ஆம் ப்பாலின் லவ் வித் க்ரித்திக் அப்பா. ஆனால் இரண்டே நாளில் காதல் என்பது சாத்தியமா? நான் சரியாகத் தான் யோசிக்கின்றேனா என்று தான் குழப்பமாக உள்ளது என்று முடித்தாள்.
அவள் பெற்றோர் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்...
YOU ARE READING
'பூ' கம்பமாய் வந்த பூகம்பம்
Romanceமதுரபாஷினி..... ஒரு பெண்னின் வாழ்வில் ஆணின் அவசியமும் ஒரு ஆணின் வாழ்வில் பெண்னின் அவசியமும் பற்றி அழகான காதலின் முலம் கூறும் மதுரபாஷினியின் வாழ்க்கையை இந்நாவலில் பகிருகிறேன்.....