இருவரும் மதுராவின் வீடு வந்து சேர்ந்தனர்.
வாங்க க்ரித்திக்... என்று மதுராவின் அம்மா உள்ளே அழைக்க,
க்ரித்திக் பேசிட்டே இருங்க 2 மினிட்ஸ்ல வந்திடறேன் என்று மதுரா அறைக்குச் சென்றாள்.ம்...
ம் வரேன்மா.. எப்படி இருக்கீங்க?
ம் நல்லா இருக்கேன்பா.... வீட்டில் அம்மா, பாப்பா அனைவரும் நலமா?
அனைவரும் நலம் அம்மா.. மதி நீங்க எப்படி இருக்கீங்க? அவரும் வந்திருக்காங்கனு மது கூறினாள். அவர் எங்க? எப்படி இருக்காரு?
நாங்கள் இருவரும் நலம் தான். அவர் இப்போ தான் ஒரு போன் கால் வந்தது என்று உள்ளே எழுந்து சென்றார். வந்துவிடுவார். இருங்க கூப்பிடறேன்.
ம் பரவாயில்லை ஏதாவது வேலையாக இருக்கப் போகிறார். நான் வெயிட் பன்றேன்.
ம்.. அதெல்லாம் ஒன்றுமில்லை க்ரித்திக். அவர் நண்பர் தான் கால் செய்திருப்பார்.
ஏங்க...! க்ரித்திக் வந்தாச்சு கீழ வாங்க...ம்.. வரேன் மா.....
ஹேய் பிரபு ஹவ் ஆர் யூ..?
பைன் மாமா..
என்ன பிரபு கால் பண்ணுனு அன்னிக்கே நம்பர் கொடுத்தேன் பண்ணவே இல்லை..!
அது நீங்க பிஸியா இருப்பீங்கனு தான் பண்ணலை.
அதெல்லாம் இல்லை. நீ எப்பொழுது வேண்டுமானாலும் அழைக்காலாம்.
சரிங்க மாமா...
சாப்டிங்களா க்ரித்திக்?
இனிமேல் தான் அம்மா.. வீட்டில் அம்மாவும் பாப்பாவும் நான் சென்றவுடன் என்னுடன் சேர்ந்து சாப்பிடுவார்கள். அதனால் நான் எப்பொழுதும் அதிகமாக வெளியில் சாப்பிடுவதில்லை.
ம் சரிப்பா... ஆனால் இன்று நீ சாப்பிட்டுதான் போக வேண்டும். அதிகம் வேண்டாம் கொஞ்சமேனும்...
ம் கண்டிப்பா. அம்மா பேச்சை மீற முடியாதே.....
என்ன க்ரித்திக் அம்மாக்கு ஐஸ் நல்லா வைக்கிறீங்க போல என்று கேட்டவாறே மதுரா ப்ரஷ் ஆகிவிட்டு வந்தாள்.
YOU ARE READING
'பூ' கம்பமாய் வந்த பூகம்பம்
Romanceமதுரபாஷினி..... ஒரு பெண்னின் வாழ்வில் ஆணின் அவசியமும் ஒரு ஆணின் வாழ்வில் பெண்னின் அவசியமும் பற்றி அழகான காதலின் முலம் கூறும் மதுரபாஷினியின் வாழ்க்கையை இந்நாவலில் பகிருகிறேன்.....