அதிர்ச்சி அடைவான் என்று நினைத்தவள் அதிர்ச்சியில் உறைந்திருந்தாள்.
என்ன திடீரென்று.... போட்டோ காட்டு மது....அவன் பேசியது அவள் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை. சிலை போல் நின்றிருந்தாள்...
ஏய் மது.... என்ன இப்படி முழிக்கின்றாய்... அதற்குள் கனவா?
ஹா..... நோ....என்ன போட்டோ காட்டுமா.. நான் எப்போது பார்ப்பேன்? ஆவலாக உள்ளேன் என்றான்....
அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. பேச முடியாமல் அழுகை தொண்டையை அடைத்தது. வேலை இருக்கிறது க்ரித்திக் பிறகு பேசலாம் என்று அழுகையை அடக்கிக் கொண்டு பேசிவிட்டு பதிலுக்கு காத்திராமல் நகர்ந்தாள்.
அவள் சென்ற பிறகு ஸாரி மது என்றான் உணர்ச்சியை துடைத்த குரலில். உன் தந்தை மட்டும் அப்படிச் சொல்லவில்லை என்றால்.......
அலுவலக வேலையை இயந்திரமாய் பார்த்தாள். இவனுக்கு என்மீது காதல் இல்லையா?? அப்படியானல் அவனின் வார்த்தைகள் எல்லாம் வெறும் நட்பு ரீதியாக மட்டும் தானா? நான் தான் மனதில் தேவையில்லாத சிந்தனைகளை வளர்த்துக் கொண்டிருந்தேனா??? கடவுளே....
என் முட்டாள் தனத்தினை என்னவென்று சொல்வது.... அவனை மறந்துவிட வேண்டுமா..? மறக்க முடியுமா?? மறந்துவிடும் முகமா அது....? அவன் வார்த்தைகள் எல்லாம் காதில் ரீங்காரமிடுகின்றனவே....
ஐய்யோ..... தலை வெடித்துவிடும் போல இருந்தது.
அதற்கு மேல் அங்கு இருக்க மாட்டாதவளாய் அரைநாள் விடுப்பு கேட்டுவிட்டு கிளம்பினாள்.அவள் செல்வதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அவள் அறியாமல்.....
என்னம்மா அதற்குள் வந்துவிட்டாய்.....
தலைவலிக்கின்றது அதனால் தான் அம்மா. நான் சிறிது நேரம் ஓய்வெடுத்தாள் தான் மாலை என்னால் தயாராக முடியும் என்று கூறிவிட்டுச் சென்றாள்....
YOU ARE READING
'பூ' கம்பமாய் வந்த பூகம்பம்
Romanceமதுரபாஷினி..... ஒரு பெண்னின் வாழ்வில் ஆணின் அவசியமும் ஒரு ஆணின் வாழ்வில் பெண்னின் அவசியமும் பற்றி அழகான காதலின் முலம் கூறும் மதுரபாஷினியின் வாழ்க்கையை இந்நாவலில் பகிருகிறேன்.....