****31****

4.2K 141 5
                                    

எப்படி இருக்குமோ என்று படபடத்த அந்த நிமிடங்கள் வெகு அற்புதமாய் அரங்கேறியது. கணநேரத்தில் அவள் கழுத்தில் தாலி ஏறியிருந்தது. க்ரித்திக் அவளது கைகளைப் பற்றிக் கொண்டு பேசி முடித்திருந்தான். அவள் கண்களில் அவளையும் மீறி கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அவளின் அக்கா, தங்கை எல்லோரும் வாழ்த்து தெரிவித்தனர். இத்துனை நடந்தும் சிலையாய் நின்றிருந்தாள்.

என்ன இது அதிசயமோ...
காதல் செய்த கரிசனமோ..
மணப்பெண்ணாய் நானும் இன்று
ஆனேனடா... என்று மனது ராகம் பாடியது.

ஹேய் மது என்னாச்சு? ரொம்ப நேரமா ஏதோ மாதிரி இருக்க? எனி பிராப்ளம்?

நோ நோ.... ஐம் ஓகே... நடப்பதெல்லாம் கனவா? நிஜமா? என்பது போல் இருக்கின்றது அதான்.

நிஜமாக நிஜம் தான் என்று சிரித்தான்.

என்ன சிரிப்பு சிரிக்காதீங்க...

ஒன்றுமில்லை... உனக்கு நிஜமென்று புரிய வைக்க ஒரு முத்தமிட்டால் எப்படி இருக்குமென்று யோசித்தேன் அதான் சிரித்தேன்.

என்ன உளறுறீங்க? முத்தமிட்டால் எப்படி நிஜமென்று உணருவேன்?

ம்.... எப்படியும் நான் அப்படி செய்தால் உடனே உன் அக்கா, தம்பி, பாப்பா னு எல்லோரும் கூடிவிடுவார்கள். அப்போது புரிந்துவிடுமல்லவா?

ஐய்ய..... உங்கள் அறிவே.. அறிவு. சற்று சும்மா இருங்கள். அருகில் அம்மா இருக்கிறார். காதில் விழுந்துவிடப் போகிறது.

இல்லை மதுரா.. இன்னும் சில நாட்களுக்கு நீங்கள் என்ன பேசினாலும் எங்கள் காதுகளில் விழாது என்றார் க்ரித்திக்கின் அம்மா.

அமைதியாக முகம் சிவந்தாள்.
என்னமது அம்மாவிற்கு கேட்டுவிட்டது போல... இது நிஜமென்று புரிகின்றதா?

புரிகிறது புரிகிறது. சற்று அமைதியாய் இருங்கள் என்று அடக்கினாள்.

பின்னர் ஒவ்வொரு சம்பிரதாயமாக க்ரித்திக்கின் காதல் வார்த்தைகளுடனும், உறவினர்களின் கேளி கிண்டல்களுடனும் இனிதாய் அரங்கேறியது.

'பூ' கம்பமாய் வந்த பூகம்பம்Where stories live. Discover now