என்ன ஆனாலும் சரி நானாக சென்று என் மனதில் உள்ள காதலை வெளிப்படுத்துவதாக இல்லை. அவராக வந்து சொல்லும் வரை காத்திருப்பேன் என்று தீர்க்கமாக முடிவெடுத்தாள்.
ஒரு வேளை சொல்லவில்லை என்றால்..? இல்லை இல்லை... அப்படி எல்லாம் யோசிக்காதே மதுரா என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டாள்....
அன்றைக்கான வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு அலுவலகத்தின் மற்ற வேலையாட்களை சந்திக்கச் சென்றாள். அனைவரும் இரண்டு நாட்களாய் இல்லாத புதுவிதமாய்ப் பார்த்தனர். மயூரியை அழைத்து என்னவாயிற்று ஏன் அனைவரும் இப்படி பார்க்கிறார்கள் என்று விசாரித்தாள்.
ஏன் உனக்கே தெரியாதா..?
என்னவென்று கூறினால் தானே தெரியும். அதுவும் இன்று விதித்திரமாகவும் எதுவும் நடக்கவில்லையே....
ஏன் நடக்கவில்லை?? நீ அந்த சிடு மூஞ்சியுடன் அல்லவா வந்தாய்.. அது விசித்திரம் இல்லையா? அலுவலகத்தில் உள்ள அனைவரையும் அவர் முழுப்பெயரையும் சொல்லி அழைக்க, உன்னை மட்டும் மது என்கிறாரே...? அது விசித்திரமல்லவா?
அப்படியானால் க்ரித்திக்கிற்கும் என்மீது....."யோசிக்கும் போதே முகம் சிவந்தாள்.."
ஏய் மதுரா என்ன அமைதியாக இருக்கின்றாய்..
நீங்களாக எதையாவது சொல்லாதீர்கள். வரும் வழியில் நான் வருவதைப் பார்த்து அழைத்து வந்தார். மதுரபாஷினி என்று நீளமாக இருப்பதால் மது என்கிறார். இதில் என்ன விசித்திரம்..? வேலையை கவனியுங்கள் மாலைக்குள் வேலையை முடிக்க வேண்டும் என்று சற்று விரைப்பாய் சொல்லிவிட்டு போனாள்.
வேலை எந்த நிலையில் உள்ளது என்பதை சொல்வதற்காக க்ரித்திக்கின் அறைக்குச் செல்ல அங்கு அவன் இவளுக்காக காத்திருந்ததைப் போல கதவை தட்டியதும் உள்ளே வா மது என்றழைத்தான்.
நான் தான்னென்று எவ்வாறு கண்டுபிடித்தீர்..?
மது நம்ம ஆபிஸ்-ல மானிட்டர் கேமிரா இருப்பதை மறந்துவிட்டாயா என்ன?
YOU ARE READING
'பூ' கம்பமாய் வந்த பூகம்பம்
Romanceமதுரபாஷினி..... ஒரு பெண்னின் வாழ்வில் ஆணின் அவசியமும் ஒரு ஆணின் வாழ்வில் பெண்னின் அவசியமும் பற்றி அழகான காதலின் முலம் கூறும் மதுரபாஷினியின் வாழ்க்கையை இந்நாவலில் பகிருகிறேன்.....