****14****

4.9K 179 2
                                    

      வழக்கம் போல் ஏழு மணிக்கெல்லாம் வீடு வந்து சேர்ந்தாள். பார்த்தீர்களா இன்று எப்பொழுதும் போல் வந்துவிட்டேன் என்றாள்.

     நாங்கள் என்ன நீ தாமதமாக வருகின்றாய் என்றா கூறினோம்? தினமும் நேரத்தில் வரும் பெண் ஒரு நாள் வரவில்லை என்றால் பெற்றவர்கள் பதறத்தான் செய்வார்கள்...
  
           சரி அம்மா.... இனி அவ்வாறெல்லாம் நடக்காது என்று கூறிவிட்டேன் அல்லவா..? விடுங்கள். நான் ப்ரஷ் ஆகிவிட்டு வருகிறேன். எல்லோரும் ஒன்றாய் சாப்பிடுவோம்..

           பத்து நிமிடங்களில் கீழே வந்தாள். கத்யரிக்காய் குழம்பு, சாப்பாடு, அப்பளம் என உணவு மணக்க மதுரா வயிறு நிறைய சாப்பிட்டாள். அனைவரும் உண்டு முடித்ததும் எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு வந்து அமர்ந்தாள்.

         இப்பொழுது அவர் தந்தை பேச ஆரம்பித்தார். மதுரா நாங்கள் உன்னை வரன் பார்ப்பதற்கு நாளை வரச் சொல்கின்றோம்.

        என்ன அப்பா..? என்னவாயிற்று நான் தான் உங்களிடம் என் மனதில் இருப்பதைக் கூறிவிட்டேனல்லவா? பிறகு ஏன் இந்த முடிவு... அதுவும் என்னைக் கேட்காமல் ஏன் இந்த முடிவு.....

         நீ நிதானத்தோடு இருந்திருந்தால் நாங்களும் இந்த முடிவை எடுத்திருக்க மாட்டோம். ஆனால் நேற்று நடந்ததோ எங்களை யோசிக்க வைத்துவிட்டது.. இதற்கு மேலும் விட முடியதம்மா.... நாளையே வரன் பேசி நாளை மறுநாளே முடியப் போவது இல்லையே... அதே சமயம் க்ரித்திக்கிடம் நீயாக சொல்லாமல் அவராக உன்னை காதலிப்பதாகவும் தெரியவில்லையே... எங்களால் காலத்திற்கும் காத்திருக்க முடியாதேம்மா? உன் அக்காவை நல்லபடியாக கரைசேர்த்தாகிற்று... அதுபோல உன்னையும் ஒரு நல்ல இடத்தில் சேர்க்க வேண்டும். ஒன்று நீயாக அவரிடம் பேசு அல்லது அவர் மனதில் என்ன இருக்கின்றது என்று தெரிந்துகொள்... அதுவும் இல்லையா... எங்களைப் பற்றி யோசி நாங்கள் சொல்வதைக் கேள் என்றார். ஆனால் ஒன்று... நாளை வருபவர்கள் எங்களைப் பொறுத்த வரையில் நல்ல வரன் எங்களால் விட்டுவிட முடியாது. ஆகையால் முடிவை நீயே எடுத்துக் கொள்.

'பூ' கம்பமாய் வந்த பூகம்பம்Where stories live. Discover now