****25****

4.3K 135 4
                                    

      பயத்திலும், பதட்டத்திலும் என்ன சொல்வதென்றே தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.

     என்ன க்ரித்திக் தனியா உட்கார்ந்திருக்க போரிங்கா இல்லையா??

         அக்கா க்ரித்திக்கிடம் பேசுகிறாரே... அவரை பார்த்துவிட்டார்களா?? ஒன்றும் புரியவில்லையே என யோசிக்கும் பொழுதே...க்ரித்திக்கின் குரல் கேட்டது.

     இல்லை மதி... சும்மா அப்படியே ரும்மை பார்த்துக் கொண்டு இருந்தேன், கவிதை ஒன்றை பார்த்ததில் நேரம் போனதையே மறந்துவிட்டேன் என்றான்.

      என்ன கவிதை...!

    இல்ல மதுவோட கவிதை ஒன்றைப் பார்த்தேன் அதைத்தான் சொன்னேன் என்றான்.

      ஏதோ இருக்கிறது... வெளியில் சென்றால் தான் புரியும். இதற்குமேல் விட்டால் க்ரித்திக் அக்காவிடம் என்னை மாட்டிவிற்றுவார் போல என்று கதவை திறந்து வெளியில் வந்தாள்.

   ஏய் மதுரா எவ்வளவு நேரமாடி குளிப்ப... க்ரித்திக் வந்து எவ்வளவு நேரமா வெயிட் பன்றாரு தெரியுமா?

       விடுங்க மதி பரவாயில்லை, நான் சும்மா இங்க உட்கார்ந்து தானே இருந்தேன்... யாரையாவது சுமந்து கொண்டா நின்றேன் என்று மதுவை பார்த்து மறுபடி தூக்கவா என்பதைப் போல சைகை காட்டினான்.

      அவள் வெட்கத்தை மறைத்து மதியிடம் பேச மிகவும் சிரமப்பட வேண்டியதாயிற்று. அதான் வந்துட்டேன்ல 5 நிமிஷத்துல கீழ வரேன்... சார் நீங்க ரொம்ப நேரமா தனி...யா வெயிட் பன்றீங்க இல்லல..... அதுக்கு சாரி என்றாள் அழுத்தி...

      சரி சரி சீக்கிரம் வாங்க. அம்மா கீழ வெயிட் பன்றாங்க. க்ரித்திக் நான் கீழ போறேன் நீங்க பேசிட்டு வாங்க.

     ம் ஓகே மதி. 2 மினிட்ஸ்..

   ம்..ம்.... என்று சிரித்துக் கொண்டே சென்றாள்.

      உங்களை.... என்று இரண்டு அடி அடித்தாள்.

     ஏய் அடிக்காதடி...

   எப்படி வந்தீங்க...? உண்மைய சொல்லுங்க..

    வாசல் வழியா தான்.. நான் ரொம்ப நல்ல பையன் மா... நேர்வழில தான் வருவேன்..

'பூ' கம்பமாய் வந்த பூகம்பம்Where stories live. Discover now