மது...கண்ணைத் திறந்து பாரு....
காரின் இருக்கையில் அவளை கிடத்தி தண்ணீரை எடுத்து முகத்தில் தெளித்தான். எப்போதும் புன்னகையால் ஜொலிக்கும் அவளது முகம் துவண்டு போயிருந்தது. தண்ணீர் பட்டதும் முகத்தை சுருக்கிக் கொண்டு மெதுவாய் கண் திறந்தாள்.
நீங்க எப்படி....?எதுவும் பேசாதேம்மா... ஜஸ்ட் ரிலாக்ஸ். வீட்டிற்கு சென்று பேசிக்கொள்ளலாம். பிரபு நீ முதலில் அம்மாவிற்கு போன் செய்து வந்துக் கொண்டிருக்கின்றோம் என்று கூறு.
இரவு நேரம் என்பதால் டிராபிக் எதுவும் இல்லாமல் அரைமணி நேரத்தில் வீடு வந்து சேர்ந்தனர். களைப்பால் அவள் உறங்கிப் போனாள்.
வந்ததும் மதுராவின் தந்தை ஓடி வந்து மதுராவை தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் வந்தார்.
அப்பா எனக்கு ஒன்றுமில்லை நான் நன்றாகத் தான் உள்ளேன்.
வெந்நீர் போட்டு எடுத்துவாம்மா என்று அவர் மனைவியிடம் கூறினார்.
வெந்நீர் வந்ததும் ஒரு வெள்ளை துணியை வெந்நீரில் நினைத்து ஒத்தடம் கொடுத்து உணவருந்த செய்தார்.சாப்பிட்டு முடித்த பிறகுதான் அவள் கொஞ்சம் தெளிவாகினாள். க்ரித்திக் இருப்பதையும் அப்போதுதான் உணர்ந்தாள்.
க்ரித்திக் நீங்க எப்படி அங்க..?
அக்கா நீ வரலைனதுமே அவர்கும் போன் செய்துவிட்டோம். அப்பா, நான், க்ரித்திக் சார் மூன்று பேரும் தேடிக் கொண்டு இருந்தோம். அப்பொழுது தான் நீ அலுவலகத்தில் இருந்து சார் நம்பர்க்கு போன் பண்ண. அதை வைத்துதான் வந்தோம் என்றான்.
ஆனால் அந்த தொலைபேசி தான் வேலை செய்யவில்லையே...!
இல்லை மது சிக்னல் ப்ராப்ளமாக இருந்தால் நான் பேசியது உனக்கு கேட்கவில்லை. ஆனால் அலுவலக எண்ணிலிருந்தே போன் வரவும் நிச்சயம் நீயாகத்தான் இருப்பாய் என்று ஊர்ச்சிதம் செய்துதான் பிரபுவை அழைத்துக் கொண்டு விரைந்து வந்தேன்.
YOU ARE READING
'பூ' கம்பமாய் வந்த பூகம்பம்
Romanceமதுரபாஷினி..... ஒரு பெண்னின் வாழ்வில் ஆணின் அவசியமும் ஒரு ஆணின் வாழ்வில் பெண்னின் அவசியமும் பற்றி அழகான காதலின் முலம் கூறும் மதுரபாஷினியின் வாழ்க்கையை இந்நாவலில் பகிருகிறேன்.....