உள்ளே அப்படி யாரிடம் தான் இவ்வளவு கோபமாய் பேசுகிறான் என்று யோசித்தாள். யாரிடமாவது கேட்கலாம் என்றால் அலுவலக நேரம் ஆரம்பிக்க இன்னும் 15 நிமிடங்கள் இருப்பதால் இனி தான் வேலையாட்கள் வரவே ஆரம்பிப்பார்கள். எப்படி தெரிந்து கொள்வது என்று யோசிக்கும் போதே க்ரித்திக்கின் அறை கதவு திறந்தது. ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வயதான அம்மா ஒருவர் வந்தார். முகத்தில் சலனமே இல்லாமல் எதற்காகவோ ஏங்குவதைப் போல காணப்பட்டார். அதையும் தான்டி அவரின் முகம் வெகு சாந்தமானவர் என்பதை சொல்லாமல் சொல்லியது. இவரையா இவ்வளவு நேரமாக கடிந்து கொண்டிருந்தான்? இவரை பார்த்தால் கோபமாய் இருப்பவர்கள் கூட சாந்தம் ஆகிவிடுவார்களே இவரிடமா கோபப்பட்டான். அவள் சொன்னது உண்மைதானோ சிடுமூஞ்சி என்பதுதான் உண்மையோ என்று யோசிக்கத் தொடங்கியது மூளை.
உள்ளே செல்வதற்கே யோசித்துக் கொண்டு கதவின் கைப்பிடியை பிடித்துக்கொண்டே நின்று கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் க்ரித்திக் வந்து வேகமாய் கதவைத் திறக்க திடீரென்று இழுத்ததில் நிலை தடுமாறி கதவில் இடித்து க்ரித்திக்கின் மேலே விழுந்தாள். உடனே சுதாகரித்துக் கொண்டு ஸ..ஸாரி ஸாரி என்றாள். இட்ஸ் ஓகே மது முதல்ல நெற்றிய தேச்சுக்கோங்க வீங்கிடப் போகுது என்று அவனும் சிறிது பதறினான். ஸாரி மது நீங்க நின்றதை நானும் கவனிக்கலை என்று அவன் பங்கிற்க்கு மன்னிப்பு கோரினான். அவளும் நெற்றியை தேய்த்துக் கொண்டே பரவாயில்லை க்ரித்திக் நான் சென்று வேலையை பார்க்கிறேன் என்று கூறி அங்கிருந்து நகர்ந்தாள்.
அவனுடைய வேலைக்கான அட்டவனையை தயார் செய்வது, மற்றவர்கள் வேலையை எந்த அளவிற்க்கு முடித்து இருக்கிறார்கள் என்பதை கண்கானித்து அவனிடம் அதை தெரியப்படுத்தி எந்த டீம் எந்த அளவில் வேலை செய்கிறது என்பது வரை துள்ளியமாய்க் கணக்கெடுத்தாள். அதுமட்டும் அல்லாது மற்ற நேரங்களில் அவள் வேலை அல்லாது மற்ற வேலைகளையும் கற்றுக் கொண்டிருந்தாள்.
அவன் இருக்கும் பக்கம் செல்லவே யோசித்தாள். மயூராவிடம் சென்று ஏன் க்ரித்திக்கை சிடுமூஞ்சி என்றீர்கள் என்று கேட்டாள்.
மயூராவோ அதிர்ச்சியாய் பார்த்தாள். என்ன கூறினாய் க்ரித்திக்கா? பெயர் சொல்கிறாய் அதுவும் மற்றவர் காதில் விழும்படியா பேசுவாய் என்றாள் மெதுவாய். ஏன் என்னவாயிற்று அவரை பெயர் சொல்லித்தானே அழைக்கின்றோம் அப்புறமென்ன என்று கேட்டாள்....
பெயர் சொல்லியா? யார் அழைத்தார்கள் என்று வினாவ அப்பொழுதுதான் மதுராவும் கவனித்தாள் அவளைத் தவிர அங்கு யாரும் பெயர் சொல்லி அழைத்துக்கொள்ளவில்லை என்று..... பிறகு ஏன் என்னை மட்டும் அவ்வாறு அழைக்கச் சொன்னான் என்று குழம்பினாள்...
மயூராவும் பேசிக் கொண்டிருந்ததை இடையிடையே கவனித்தாள். நம் வேலை நாம் சொன்ன நேரத்திற்க்கு முடிக்கவில்லை என்றால் உனக்கு ஒரு நிமிடம் கூட அவகாசம் கிடையாது, அடுத்து உன்னை திட்டித் தீர்த்துவிடும் இந்த சிடுமூஞ்சி. ஐந்து நிமிட தாமதத்தில் அப்படி என்ன பெருசா ஆகிடும்.... என்று குறைபட்டாள்.
அப்பொழுதுதான் மதுரா யோசித்தாள். அந்த நிறுவனமோ கன நேரத் தாமதத்தில் பல லட்சங்களை இழக்க நேரும் வளர்ந்து கொண்டிருக்கின்ற நிறுவனம். மயூராவையும் இவள் பார்த்திருக்கிறாள் அலுவலக நேரத்தில் நான்கில் ஒரு பங்கு நேரம் மட்டுமே வேலை செய்வாள். மற்ற நேரங்களில் வீண் அரட்டை பேசியே நேரத்தைக் கடப்பாள். இப்படி இருந்தாள் யார் தான் திட்ட மாட்டார்கள் என்றும் யோசித்தாள். ஆனாலும் காலையில் அவள் கேட்ட அந்த கோபமான குரல் அவனுடையது தானே... என்று நினைத்து உண்மையிலேயே சிடுமூஞ்சியோ என்று சோர்ந்து போனாள்.
மிஸ்.மதுரா வேலை பற்றி பேச வேண்டியிருக்கிறது, ஆனால் இங்கு இல்லை வெளியில் செல்ல வேண்டும் என்றான்.
அவளும் ஓகே என்று கிளம்பினாள். மற்றவர் முன்னே பெயர் சொல்லவும் முடியாமல் அவன் கொடுத்த இரண்டாம் வாய்ப்பை நழுவ விடவும் மனமில்லாமல் வெறும் ஓகே மட்டும் சொன்னாள்.
கார் சீரிப் பாய்ந்தது. காலையின் கோபம் இன்னும் குறையவில்லை போலும் என்று யோசித்தாள். பெறும் அமைதி நிலவியது. அவனது மொபைல் ஒரு பாடலை பாடி அந்த அமைதியை உடைத்தது. அவன் போனை எடுத்து என்னவாயிற்று என்றான் கடுமையான குரலில். அவனது இந்த கோபக் குரல் அவளுக்கு அச்சத்தை மூட்டியது. இந்த கோபத்தில் அலுவலக வேலையை பேசினாள் இன்னும் கோபம் அதிகமாகுமோ என்று நினைத்து தன்னை மறந்து மாட்டினோமா இன்று செத்தோம் என்று வாய்விட்டே புலம்பிவிட்டாள்.
YOU ARE READING
'பூ' கம்பமாய் வந்த பூகம்பம்
Romanceமதுரபாஷினி..... ஒரு பெண்னின் வாழ்வில் ஆணின் அவசியமும் ஒரு ஆணின் வாழ்வில் பெண்னின் அவசியமும் பற்றி அழகான காதலின் முலம் கூறும் மதுரபாஷினியின் வாழ்க்கையை இந்நாவலில் பகிருகிறேன்.....