இருவரும் அலுவலகம் கிளம்பி மாடியிலிருந்து கீழிறங்கி வந்தனர்.
வாம்மா... உட்காரு இப்போதான் உன்னைக் கூப்பிட மாடிக்கு வரலாம் என்று நினைத்தேன். உனக்கு பிடித்தவை எல்லாம் சமைத்திருக்கிறேன் மது. மீன் பொறித்து வைத்திருக்கின்றேன். இப்போ சாப்பாடு சாப்பிடுமா... பிறகு, பழங்கள் இருக்கு அதை சாப்பிடு.
அம்மா இன்று நான் அவருடன் அலுவலகம் செல்கிறேன். அதனால்... என்று ஆரம்பிக்குமுன் இடைமறித்தார்..
என்ன அலுவலகமா? என்னம்மா நீ... இந்த நேரத்தில நீ அங்குலாம் போக வேண்டாம். இன்னும் இரண்டு வருஷத்துக்கு அலுவலகம்-ங்கிற பேச்சே எடுக்கக் கூடாது...
சரிங்கம்மா... ஆனால் அப்பப்போ முக்கியமான வேலைல நானும் கொஞ்சம் பங்கெடுக்கத்தான் வேண்டும். எனக்கும் கொஞ்சம் சேன்ஞ் வேண்டும் அம்மா. அதற்காக மட்டும் தான். நான் உங்களுக்கு வாக்கு கொடுக்கின்றேன் நான் அதிக வேலை செய்து ஸ்ட்ரெஸ் எடுத்துக் கொள்ள மாட்டேன். ஜஸ்ட் க்ரித்திக் கூட ஹெல்ப் மட்டும் தான். பார்ப்பது மட்டும் தான் என் வேலை.. ஏதாவது சஜஸன் சொல்வேன் அவ்வளவு தான். ப்ளீஸ் அம்மா...
சரிசரி.. ஆனால் நான் தினமும் அலுவலகம் செல்ல அனுமதிக்க மாட்டேன்.
சரிங்கம்மா... நான் தினமும் போகமாட்டேன். இன்று மட்டும் தான் அப்புறம் பிராஜெக்ட் முடியும் அன்று ஒருநாள் தான் ... பிராமிஸ்.
சரிம்மா பார்த்து போயிட்டு வாங்க.
தாங்க்ஸ் அம்மா..
ம் சரி தாங்க்ஸ் லாம் அப்புறம் சொல்லிக்கலாம். முதல்ல சாப்டுங்க...
ம் வைங்க வைங்க... ஒருபிடி பிடிச்சுடுறேன்...
என்ன? அப்போ எனக்கு சாப்பாடு கிடைக்காது போலவே..
என் பொண்ணு சாப்பிடுறத கண் வைக்காத டா...
ஹாலோ... நான் தான் முதலில் அம்மா என்றழைத்தவன் என்று பொய்யாய் கோபப்பட்டான்.
YOU ARE READING
'பூ' கம்பமாய் வந்த பூகம்பம்
Romanceமதுரபாஷினி..... ஒரு பெண்னின் வாழ்வில் ஆணின் அவசியமும் ஒரு ஆணின் வாழ்வில் பெண்னின் அவசியமும் பற்றி அழகான காதலின் முலம் கூறும் மதுரபாஷினியின் வாழ்க்கையை இந்நாவலில் பகிருகிறேன்.....