****35****

4.3K 129 4
                                    

          லவ் யு மது. லவ் யூ ஸோ மச்...

       அட போங்க க்ரித்திக் இவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிச்சுட்டீங்க..!

    ஏய் உன்னைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும், என்னைப் பற்றி உனக்கு நன்றாகத் தெரியும் என்பதையும் நானறிவேன்.... சரி சொல்லு எப்போ கன்ப்பார்ம் பண்ணனு.

    மதியம் தான் க்ரித்திக். இதுக்காக தான் மதியமே கிளம்பி வந்தேன்.

      அடிப்பாவி என்னிடம் சொல்லியிருந்தால் நானும் வந்திருப்பேன் அல்லவா??

    இல்லைங்க, நான் ஏதாவது சர்ப்ரைஸ் பண்ண வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் பிறகுதான் தோன்றியது அம்மாவிற்கும், பாப்பாவிற்கும் சர்ப்ரைஸ் பண்ணலாம் என்றும், உங்களுக்கு வேறு மாதிரியாக தெரிய படுத்த வேண்டும் என்றும்.. அதான்.... அதற்குள் நீங்கள் இவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவும் இல்லை....

    அப்படியா?? நீ முன்பே கூறியிருந்தால் நான் சிறிது நேரத்திற்கு தெரியாததைப் போல் நடித்திருப்பேனே...

    போங்க க்ரித்திக்... என் ப்ளான வேஸ்ட் பண்ணிட்டீங்க..

    சரிவிடுடி நெக்ஸ்ட் டைம் பார்த்துக் கொள்ளலாம்.

      போங்க....

    என்ன எதைச் சொன்னாலும் போங்க போங்கனு சொன்னா நான் என்னதான் மா பண்ணட்டும்...

    நீங்கள் ஒன்றும் பண்ண வேண்டாம். அட்லீஸ்ட் அம்மா, பாப்பாவிற்காவது சர்ப்ரைஸா இருக்க மாதிரி ஏதும் ஐடியா சொல்லுங்கள்.

      ம் சரி... யோசித்துக் கூறுகிறேன்.

        நீண்ட விவாதத்திற்குப் பிறகு இருவரும் ஒருவாறு முடிவெடுத்தனர்.

      மது நீ முதலில் நன்றாக ஓய்வு எடு. நேரத்திற்கு தூங்க வேண்டும் நீ. முன்பைவிட நீ இப்போது உன் நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நீ மட்டுமல்ல நானும் உன் நலனில் அதிக கவனம் செலுத்தப் போகிறேன்.

'பூ' கம்பமாய் வந்த பூகம்பம்Where stories live. Discover now