மதுராவின் மனதிற்குள்ளும் நாள் முழுவதும் க்ரித்திக்கை பார்க்காமல் எப்படி இருப்பது என்ற ஏக்கம் இருக்கத்தான் செய்தது. ஆனால் க்ரித்திக் வீட்டிற்கு வந்ததும், நடந்த விஷயங்களும், அவளுக்கு அன்று முழுவதுமே ஆனந்தமாக இருந்தது.
க்ரித்திக்கிற்கும் அப்படி தான். அலுவலகத்தில் தனிமையில் சிரித்துக் கொண்டே நேரத்தைக் கடத்தினான். வேலையில் மனம் லயிக்கவில்லை.
எப்பொழுது மாலை வரும், பிரபுவை அழைக்க வந்தேன் என்ற காரணத்தைக் கூறி மறுபடியும் மதுவை சந்திக்கலாமே என்று காத்துக் கொண்டிருந்தான்.
மாலையும் வந்தது,
நாள் முழுவதும் வேலையால் மிகவும் சோர்ந்து இருந்தாள் மதுரா. மதுரா மட்டுமல்ல அவள் தாயும் தமக்கையும் கூட சோர்ந்துதான் காணப்பட்டனர். க்ரித்திக் மூவரையும் பார்த்துவிட்டு என்ன இது ஒரே நாளில் இப்படி வேலை செய்வதா? இப்படி களைத்திருக்கிறீர்களே?
இல்லை க்ரித்திக் கொஞ்சம் வேலை தான் முதலில் இருந்தது, ஆனால் பிறகுதான் வீட்டில் எல்லாவற்றையும் மறுபடி புதிதாக அடுக்கி வைத்துவிட்டால் இன்னும் நன்றாக இருக்குமே என்று உடனே செய்துவிட்டோம்.
முதலில் மூன்று பேரும் வந்து உட்காருங்கள். ஏதாவது சாப்பிட்டீர்களா இல்லை சாப்பிடாமலே வேலையை செய்து கொண்டிருக்கிறீர்களா?
இல்லை க்ரித்திக் வீட்டை சுத்தம் செஞ்சதுல எங்க மேல குப்பையா இருக்கும் சுத்தமாகிட்டு வந்துதான் சாப்பிடனும்.
ஏன் அம்மா இப்படி பண்றீங்க? நேராநேரத்துக்கு சாப்பிடனும் இல்லையா? கை கால் அலம்பிட்டு வந்து சாப்பிட்டு இருக்கலாமே..? சரி, நீங்க இப்போ ரெஸ்ட் எடுங்க. நான் டீ போட்டு எடுத்து வரேன்.
பரவாயில்லைப்பா உனக்கு ஏன் சிரமம். இதோ வேலை முடிந்துவிட்டது. இனி குளிச்சுட்டு வந்து சாப்பிடறது தான்.
அட என்ன அம்மா இதுல சிரமம் இருக்கு? என் வீட்டு ஆளுங்களுக்காக ஒரு டீ போடுறதுல என்ன ஆகிடப் போகுது. நீங்க முதலில் அமைதியாக ஓய்வெடுங்கள். அதுமட்டுமல்லாமல் மது குளித்துவிட்டு வருவதற்குள் நீங்கள் களைப்பில் மயங்கியேவிடுவீர்கள். அதான் காலையில் பார்த்தேனே... அப்பப்பா..!!! எவ்ளோ.. நேரம்..
YOU ARE READING
'பூ' கம்பமாய் வந்த பூகம்பம்
Romanceமதுரபாஷினி..... ஒரு பெண்னின் வாழ்வில் ஆணின் அவசியமும் ஒரு ஆணின் வாழ்வில் பெண்னின் அவசியமும் பற்றி அழகான காதலின் முலம் கூறும் மதுரபாஷினியின் வாழ்க்கையை இந்நாவலில் பகிருகிறேன்.....