என்ன மாப்பிள்ளை எனக்கு டீ இல்லையா? அவர்கள் மூவருக்கு மட்டும் தானா?
வாசலில் சப்தம் கேட்க அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.
மதுராவின் அப்பா தான் அந்த குரலுக்குச் சொந்தக்காரர்.
வாங்க அப்பா உங்களுக்கு இல்லாமலா? உங்களை பார்க்கவே முடியவில்லை? இன்றைக்காவது பார்த்தோமே... என்றான் க்ரித்திக்.
ம் ஆமாம்பா கொஞ்சம் வேலை தான். இப்போ ப்ரீ தானே எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம்.
ஆனால் க்ரித்திக் மாமா இன்று என்னை வெளியே கூட்டிச் செல்வதாக கூறினாரே, பிறகு உங்களுடன் எவ்வாறு பேசுவார் என்றவாறே பிரபு உள்ளே வந்தான்.
உள்ள வரும்போதேவா டா? என்று மதி அவனை உள்ளே அழைத்தாள்.
நாம போலாம் பிரபு. எவ்வளவு நேரம் ஆனாலும் நாம இன்னிக்கு வெளிய போறோம் ஓகேவா?
அப்போ சரி மாமா. நீங்க எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அப்பாவிடம் பேசிக் கொள்ளுங்கள்.
அனைவரும் சிரித்தனர். பிறகு மதுராவின் அப்பாவிடம் திருமண வேலைகளைப் பற்றி பேசிவிட்டு பிரபுவை கூட்டிக் கொண்டு கிளம்பினான்.
என்ன மாமா எங்க போறோம்??
பிரபு ஷாப்பிங் தான் போறோம். உங்க அக்காக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுனு நீதான் சொல்லனும். உங்க அக்கா கல்யாணம் ஆகி வீட்டிற்கு வரும்பொழுது எங்க ரூம் அவளுக்கு பிடித்த மாதிரி இருக்கனும்னு நான் ஆசைப் படறேன் அதுக்குதான் போறோம்...
ஓ.... அப்படி போகுதா கதை... நீங்க நடத்துங்க மாமா....
டேய் கம்முனு வாடா.... சின்ன பையனாச்சே அமைதியா வருவனு கூட்டிட்டு வந்தா....
ஓ சின்ன பையனா? அப்படினா எனக்கு எப்படி தெரியும் மதுராக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுனு?
அடேய்... உங்க அக்கா மாதிரியே பண்றியேடா.... ப்ளீஸ் மச்சான்....
YOU ARE READING
'பூ' கம்பமாய் வந்த பூகம்பம்
Romanceமதுரபாஷினி..... ஒரு பெண்னின் வாழ்வில் ஆணின் அவசியமும் ஒரு ஆணின் வாழ்வில் பெண்னின் அவசியமும் பற்றி அழகான காதலின் முலம் கூறும் மதுரபாஷினியின் வாழ்க்கையை இந்நாவலில் பகிருகிறேன்.....