உங்க அண்ணனுக்கு போன் பண்ணுமா. எப்பயும் லேட்டா தான் வரான். கல்யாணமே முடிவாகிடுச்சி இனியும் இப்படியே பண்ணா வேற வழியே இல்லை அடி தான்.
அடியா?? ஐய்யோ அதான் வந்துவிட்டேனே...!
ஆமாப்பா அடியே.. தான். இனி நீ வருவதற்கு தாமதமானால் நிச்சயம் அடிதான். நாளை என் மருமகள் வந்து அத்தை என்ன உங்கள் மகன் வீட்டிற்கே வர மாட்டேங்கிறார் என்று கேட்டுவிட்டால் நான் என்ன செய்வேன்... அதான் இப்பொழுதே சரி பண்ணிவிடலாம் அல்லவா??
அம்மா நீங்க வேற.... அண்ணி வந்துவிட்டால் அண்ணன் அலுவலகம் வரவில்லை என்ற புகார்கள் மட்டும் தான் வரும்.
ஆமா அம்மா பெரிய மனுஷி சொல்லிட்டாங்க. கேட்டுக்கோங்க...
அம்மா நீங்கள் வேண்டுமென்றால் பாருங்கள் நான் சொன்னது போல் தான் நடக்கும். அப்பொழுது நீங்கள் அண்ணாவை அலுவலகம் அனுப்புவதற்கு தான் சிரமப்பட போகிறீர்கள் என்று சிரித்தாள் அவன் அன்புத் தங்கை.
ஓய் வாயாடி நீ இங்க வா உன்னை பேசிக்கிறேன் என்றான் க்ரித்திக்..
என் பையன் அப்படி இருந்தாலும் நான் சந்தோஷப் படுவேன். இத்துனை வருடங்களாகத் தான் நமக்காக அலுவலகம், வேலை என்று ஓடினான். இனியாவது அவன் சந்தோஷத்திற்கு நேரம் ஒதுக்கட்டுமே..!
ம்..ம்... அண்ணா அப்போ உன் காட்டில இனி அடை மழை தான் போ...
உன்னை......
ஐய்யோ! அம்மா காப்பாற்றுங்கள்....
டேய் விடுடா அவளை, இன்னும் சிறு பிள்ளைகளைப் போல ஓடி விளையாடிக் கொண்டு, எங்கயாவது விழுந்துவிடப் போகிறீர்கள்.
விழமாட்டோம் அம்மா. ஒரே எட்டில் தங்கையை தாவிப் பிடித்து செல்லமாய் அவள் காதை திருகினான்.
அண்ணா ஸாரி.. ப்ளீஸ் விட்டுவிடு அண்ணா.. ஸாரி....
அப்படி வா வழிக்கு.... இனி இப்படி ஓவரா பேசுவ..?!
மாட்டேன்... பேசவே மாட்டேன்.... விடுண்ணா.. என்று செல்லங் கொஞ்சினாள்.
YOU ARE READING
'பூ' கம்பமாய் வந்த பூகம்பம்
Romanceமதுரபாஷினி..... ஒரு பெண்னின் வாழ்வில் ஆணின் அவசியமும் ஒரு ஆணின் வாழ்வில் பெண்னின் அவசியமும் பற்றி அழகான காதலின் முலம் கூறும் மதுரபாஷினியின் வாழ்க்கையை இந்நாவலில் பகிருகிறேன்.....