இருவரையும் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். உள்ள வாங்க... வந்து உட்காருங்க..
மாமா என்கூட வாங்க நாம பேசலாம் என்று பிரபு க்ரித்திக்கை அழைத்து சென்றான்.என்ன மது வேலையெல்லாம் முடித்தாயிற்றா? நீ தான் அலுவலகத்தையே தாங்குவதைப் போல இந்த நிலைமைலயும் ஓடுகிறாயே என்றாள் மதி...
எல்லாம் முடிந்தது... நானும் கூட இருந்தால் அவருக்கு உதவி செய்வேன்... பாவம் அவர் மட்டும் தனியா வேலை செய்யனும்.
ஓ.... ஹலோ... நீ போறதுக்கு முன்னாடியே க்ரித்திக் 3 அலுவலகங்களை பார்த்துக் கொண்டிருந்தார். மறுந்துவிட்டாயா?
ம் அது அப்போ....இப்போ நான்தான் ஹெல்ப் பண்ணனும்.
ஏன் இப்போ உன் க்ரித்திக்கின் மூளை வேலை செய்வதை நிறுத்திவிட்டதா??
அக்கா.... இப்படிலாம் பேசுன அப்றம் எனக்கு செம்ம கோவம் வரும்....
அடடா... வந்ததும் வராததுமா ஆரம்பிச்சுட்டீங்களா உங்க சண்டைய....
இல்லைம்மா... சும்மாதான் நானும் அக்காவும் பேசிக்கிறோம்...
முதல்ல போயி க்ரித்திக் கூட இருங்க. அவர் தம்பி கூட விளையாடிட்டு இருந்தாரு... போர் அடிக்கப் போகிறது.
சரிம்மா... நான் பார்த்துக் கொள்கிறேன்.
ம்... நான் டீ போட்டு எடுத்துட்டு வரேன். மதி நீ என்னுடன் வா வேலை இருக்கிறது...
அக்கா நான் பாப்பாவை பார்த்துக் கொள்கிறேன்...
சரிசரி.....
சுடச்சுட பஜ்ஜியும் சூடான டீயும் வர அனைவரும் ரசித்து ருசித்தனர்.
மதுவ மறுபடியும் எப்பம்மா கூட்டிட்டு போகலாம்??
இன்னும் ஒரு அறு ஏழு மாசம் தான் க்ரித்திக். நீங்களும் அம்மாவும் சரின்னு சொன்னா குழந்தைக்கு ஒரு வயசு ஆகுற வரைக்கும் கூட இங்கயே வச்சுக்கலாம்னு இருக்கோம் க்ரித்திக்.
என்ன ஒரு வருஷமா??
என்னங்க... ஏதோ தெரியாததைப் போல கேட்குறீங்க?
YOU ARE READING
'பூ' கம்பமாய் வந்த பூகம்பம்
Romanceமதுரபாஷினி..... ஒரு பெண்னின் வாழ்வில் ஆணின் அவசியமும் ஒரு ஆணின் வாழ்வில் பெண்னின் அவசியமும் பற்றி அழகான காதலின் முலம் கூறும் மதுரபாஷினியின் வாழ்க்கையை இந்நாவலில் பகிருகிறேன்.....