கீழிறங்கி வரும் பொழுதே சமையலின் மணம் க்ரித்திக்கின் பசியைத் தூண்டியது. நேராக சமையலறையை நோக்கி வந்தான். ஆஹா... வாசனையே இவ்வளவு சூப்பரா இருக்கே... இன்றைக்கு என்னென்ன ஸ்பெஷல் னு மாமியாரும், மருமகளும் அப்படியே ஐட்டம்ம சொல்லுங்க பார்ப்போம்..
உங்களுக்கு பிடிச்ச கத்திரிக்காய் சாம்பார், மிளகு ரசம், இஞ்சி- கொத்துமல்லி போட்ட தயிர், அப்புறம் ஸ்பெஷல் பால்கோவா... என் கையால செஞ்சது..
எல்லாமே நீ தான் செஞ்சியா மது?
ஆமாடா... என்னை பக்கத்தில கூட வரவிடலை. அம்மா நீங்க தானே எல்லா நாளும் சமைக்றீங்க, இனி கொஞ்சம் ஓய்வு எடுங்கனு சொல்லிட்டாப்பா...அதுவும் சரிதான் அம்மா... இன்னும் எத்துனை நாள் தான் நீங்கள் எனக்காகவும், பாப்பாவிற்காகவும் பார்த்து பார்த்து வேலை செய்வீர்கள். அதனால் இனி உங்களுக்கு ஓய்வு தான். மது மற்ற வேலைகளைப் பார்த்துக் கொள்வாள்...
ஆமாம்மா அவர் சொல்வதும் சரியே. நீங்கள் என்ன வேலை எப்படி செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள் நான் அப்படியே செய்துவிடுகின்றேன்.
நீ புதுமணப்பெண் அம்மா.. உன்னை வேலை செய்யச் சொல்லி நான் உட்கார்ந்தால் ஊர் என்ன சொல்லும்?
அம்மா... புதுப் பெண்ணாக இருந்தாலும் நான் இந்த வீட்டுப் பெண். என் வீட்டு வேலைகளை நான் செய்தால் யார் என்ன சொல்லிவிடுவார்கள்??
அதற்குள் மாமியார் மருமகள் ஆர்கியூமென்ட் ஸ்டார்ட் பண்ணீட்டிங்களா?? பசிக்கின்றது...வாருங்கள் முதலில் சாப்பிடுவோம்.
சரி போயி உட்காருப்பா, உணவை எடுத்து வைக்கின்றோம். உங்க பாப்பாவையும் அப்படியே கூப்பிடு....
க்ருபா... சீக்கிரம் வா... இல்லைனா ஒரு அறுசுவை விருந்தை மிஸ் பண்ணிவிடுவாய்...
ம் வந்துவிட்டேன் அண்ணா... வாசனைதான் என் மூக்கைத் துளைக்கின்றதே...
நால்வரும் ஒன்றாய் காலை உணவை மகிழ்ச்சியோடு உண்டனர். க்ருபாவோ... அண்ணா அண்ணிக்கு ஊட்டி விடுங்கள், அண்ணி நீங்களும் ஊட்டி விடுங்களேன் என்று அவர்களை ஊட்டிக்கொள்ள வைத்து கிண்டலும் கேலியுமாக சாப்பிட்டு முடித்தனர்.
பிறகு கல்யாணத்தில் நடந்த விஷயங்களைப் பற்றி அளவலாவி விட்டு மதியம் என்ன வேலைகளைச் செய்யலாம் என்று பேசிக் கொண்டிருந்தனர்.
மதுராவின் போன் ஒலிக்க, மதுரா சென்று இணைப்பினைக் கொடுத்தாள்.
அவள் வீட்டிலிருந்து தான் கால் செய்திருந்தார்கள். என்ன பன்றமா... உங்க அத்தை, க்ருபாலாம் என்ன செய்கிறார்கள், வேலை ஏதும் செய்தாயா? இல்லை நம் வீட்டில் ஏமாற்றுவதைப் போல் அங்கயும் ஏமாற்றுகிறாயா??
ம்..... அதெல்லாம் இல்லை... காலையில் கூட நான்தான் சமைத்தேன் அம்மா.. சூப்பரா இருக்குனு சொன்னாங்க.
அப்படியா.... பாவம் அவர்கள். புதுப்பெண் வருத்தப்படுவாளே என்று பொய் சொல்கிறார்கள் என்று கிண்டல் செய்தார் அவள் அம்மா..
போம்மா....
சரி சரி அப்பா, தம்பி, அக்கா எல்லோரும் பேசனுமாம் பேசு கொடுக்கறேன்.
அரைமணி நேரம் பேசிவிட்டு வந்தாள். அம்மா தான்ம்மா பேசுனாங்க. அதான் இவ்வளவு நேரம் ஆகிவிட்டது.
பரவாயில்லைம்மா... புதுசா உன்னை பிரிஞ்சு இருக்காங்க இல்லையா அதான். இப்போதாவது போன் இருக்கின்றது, நான் திருமணமாகி வந்தபோது அடுத்த நாளே காய்ச்சல் வந்துவிட்டது. குறையாமல் அதிகமாகவே க்ரித்திக் அப்பா மிகவும் பயந்துவிட்டார். அன்று மாலையே என்னை எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார். பிறகு ஒரு வாரம் ஆகிற்று தெரியுமா மதுரா என்று தன் நினைவுகளைச் சொல்லி சிரித்தார்.
நால்வரும் நண்பர்களைப் போல கேலி பேசிவிட்டு, திருமண வேலை களைப்பில் உறங்கச் சென்றனர்.
YOU ARE READING
'பூ' கம்பமாய் வந்த பூகம்பம்
Romanceமதுரபாஷினி..... ஒரு பெண்னின் வாழ்வில் ஆணின் அவசியமும் ஒரு ஆணின் வாழ்வில் பெண்னின் அவசியமும் பற்றி அழகான காதலின் முலம் கூறும் மதுரபாஷினியின் வாழ்க்கையை இந்நாவலில் பகிருகிறேன்.....