****18****

5.1K 144 3
                                    

      மூடி வைத்த வைரம் அதன் ஒளியை கசிய விடுவதைப் போல சூரியன் தன் பிரகாசமான ஒளியை சிதறவிட்டுக் கொண்டிருந்தது.

            கதிரவனைப் பார்த்து உன்னைவிட பிரகாசமான ஒருவரை எனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள போகின்றேன் என்று பெருமிதத்தோடு உரைத்தாள். என்னவன் முன் உன் ஒளியும் அழகும் குறைவுதான் என்று க்ரித்திக்கை நினைத்து முகம் சிவந்தாள்.

         முதன் முறையாக என்னவனுடன் உரிமையோடு  வெளியில் செல்லப் போகிறேன் என்று தனக்குத் தானே பேசிச் சிரித்துக் கொண்டாள். வெகு விரைவில் குளித்து முடித்து வெள்ளையில் மயில் நிறமான ஊதா நிறத்தில் மயிலையே வரைந்திருந்த ஒரு சுரிதாரை உடுத்திக் கொண்டாள். அளவுடன் முகத்திற்கு பவுடர், தங்க நிறப் பொட்டு, வழக்கமான ஒன்றாக குங்குமக் கீற்று என முகத்திற்க்கு அலங்காரத்தினை முடித்தாள்.
கைகளிள் மெலிதான இரண்டு வளையல்கள் அதிலும் மயில் உருவம் பொறித்திருந்தது. கழுத்தில் மெலிதான ஒரு சங்கிலி அதிலும் மயில் ஒன்று தன் அழகிய தோகையை விரித்து ஆடிக் கொண்டிருந்தது. கூந்தலை பின்னாமல் சிறிய க்ளிப்பினால் அடக்கி சரியவிட்டிருந்தாள். கதைகளில் கூறப்படும் தேவதையாய் தோற்றமளித்தாள். ஒப்பனையெல்லாம் முடித்துவிட்டு சாப்பிட வந்தாள்.

           அம்மா.... யாரோ வந்திருக்காங்க... இங்கவாம்மா... என்று மதி அவள் அம்மாவை அழைத்தாள்.  வாங்க...! உங்களுக்கு யாரைப் பார்க்கவேண்டும் என்று மதுராவைப் பார்த்துச் சிரித்தாள்.

       மதுராவின் தாயாரோ ஏய் மதி... அவங்க பக்கத்து வீட்டிற்கு வந்தவர்கள் போல வெளிய போக சொல்லுடி என்று நக்கலடித்தார் அவர் பங்கிற்கு.

        அம்மா, விளையாடாதீர்கள்... எனக்கு அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது, சீக்கிரம் மதிய உணவைக் கட்டி கொடுங்கள்.

       ஓ.....நீ அலுவலகம் தான் செல்கிறாயா? நாங்கள் என்னவோ நீ க்ரித்திக் உடன் வெளியில் செல்ல போகிறாய் என்றல்லவா நினைத்தோம்?? உண்மையைச் சொல்லிவிடு.... நீயாக உளறிவிடுவாய் என்று உனக்கே தெரியும்.. என்றாள் மதி.

'பூ' கம்பமாய் வந்த பூகம்பம்Where stories live. Discover now