காலை உணவை முடித்துவிட்டு அலுவலகம் கிளம்பிச் சென்றான். இரண்டு நாட்களுக்குப் பிறகு வருவதாய் கூறிவிட்டுச் சென்றான்.
க்ரித்திக்கின் அருகில் வெகு வேகமாய் சென்ற மணித்துளிகள் இன்று ஏனோ ஆமையாய் ஊர்ந்தது.
தன்னைத்தானே திட்டிக் கொண்டாள். என்னதான் காதலாக இருந்தாலும் நான் என் அம்மா வீட்டில் இருக்கும் போதும் இப்படி சோம்பேறியாய் நாள் போகுமா? அது எப்படி அவ்வாறு இருக்க முடியும்.எல்லாம் என் முட்டாள் தனம் தான் என்று அவளை அவளே சமாதானம் செய்து கொண்டாள். அவரையே நினைக்காமல் ஒழுங்காய் வேலையை கவனித்தால் நேரம் தன்னால் ஓடிவிடும்....அப்படித்தான் நாட்களை வலுக்கட்டாயமாய் ஓட்டினாள்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு க்ருபாவும், க்ரித்திக்கும் வந்தனர். சிறிது நேர அரட்டைக்குப் பிறகு மருத்துவமனைக்குச் சென்றனர்.குழந்தை ஆரோக்கியமா இருக்காங்க. மதுவும்தான்....கொடுத்த மெடிசின்ஸ்ஸ ரெகுலரா பாலோ பண்ணுங்க.. பயப்பட வேண்டாம். நார்மல் டெலிவரியே ஆகும் என்றார் டாக்டர்.
டாக்டரே சொல்லிட்டாரு... இனிமேலாவது பயப்படாதீங்க..
நான்தான் அன்றே சொல்லிவிட்டேனே....
ம் சரிமா...
இரண்டு மாதம் என்பது இரண்டு வருடங்களாய் ஓடியது. இடையிடையே க்ரித்திக்கின் தொலைபேசி அலைப்புகளும், அவ்வப்போது கிடைக்கும் அவனது தரிசனமும் தான் மதுராவின் எனர்ஜியாக இருந்தது. வளைகாப்பு அவள் வாழ்நாளின் மறக்க முடியாத நாளாய் இருந்தது. இந்த நினைவுகளில் மாதங்கள் ஓடின.. க்ரித்திக்கின் ப்ராஜெக்ட் வொர்க் முடிய... அதை பிரசென்டேசன் முடித்துவிட்டால் கான்ட்ராக்ட் வெற்றிகரமாய் முடிந்துவிடும் என்றானது.
ஒருவாரத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறந்துவிடும் என்ற நிலையில் இரண்டு நாட்களில் பிரசோன்டேசனுக்கான அழைப்பும் வந்தது. ஆனால் க்ரித்திக்கோ குழந்தை பிறந்துவிடும் என்று கூறியதிலிருந்து அவளை க்ஷண நேரம் கூட பிரியாமல் இருந்தான்.
YOU ARE READING
'பூ' கம்பமாய் வந்த பூகம்பம்
Romanceமதுரபாஷினி..... ஒரு பெண்னின் வாழ்வில் ஆணின் அவசியமும் ஒரு ஆணின் வாழ்வில் பெண்னின் அவசியமும் பற்றி அழகான காதலின் முலம் கூறும் மதுரபாஷினியின் வாழ்க்கையை இந்நாவலில் பகிருகிறேன்.....