****37****

3.8K 129 11
                                    

         வீடு முழுக்க அலங்காரங்கள், மதுராவின் அக்கா, அத்தை, சித்தி, மாமா, பாட்டி, தாத்தா, தம்பிகள், பாப்பா என அனைவரும் நின்றிருந்தனர். இருவரும் உள்ளே வந்ததும் கங்கிராட்ஸ் என அனைவரும் கூச்சலிட இவர்கள் வாயடைத்து நின்றனர்.

    மது சென்று தாத்தா பாட்டியிடம் ஆசி வாங்குங்கள் என்று உசுப்பினார் க்ரித்திக்கின் தாயார்.

   பிறகே இருவரும் நினைவு பெற்றனர்.

    ஆசிர்வாதம் பண்ணுங்க தாத்தா...பாட்டி,

    நல்லாயிருங்கப்பா... சந்தோஷமா இருங்க, கடவுள் அருளால் நல்ல ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுங்கள்.

      அப்பா..அம்மா நீங்களும் எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க...

    ம்... எங்க ஆசிர்வாதம் எப்பொழுதும் உங்களுக்கு இருக்கும். நீடித்த ஆயுளுடன் மகிழ்ச்சியாய் வாழுங்கள்.

     அனைவரின் ஆசி மற்றும் வாழ்த்துகளையும் பெற்றனர்.

   இப்பொழுது கூறுங்கள் உங்களுக்கு எவ்வாறு நாங்கள் வருவது தெரிந்தது? என்று க்ரித்திக்கும் மதுராவும் கேட்டார்கள்.

   ஏன்டா உங்களுக்கு மட்டும் தான் சர்ப்ரைஸ் கொடுக்க தெரியுமா என்ன?? என்று க்ரித்திக்கின் அம்மா கேட்க...

    அம்மா நீங்க... நீங்க எப்போ எல்லோரிடமும் கூறினீர்கள்? உங்களுக்கே காலைலதானே தெரியும்??

    ம் ஆமாம்மா.... நான் கடவுளிடம் நன்றி கூற சென்றேனல்லவா? அப்போதே கூறிவிட்டேன். நாங்க உங்களைப் பெற்றவர்கள் மா.... எங்களுக்கும் எங்கள் பிள்ளைகளை சர்ப்ரைஸ் பண்ணத் தெரியும்...

    போங்கம்மா... நாங்க ஷாக் ஆகிட்டோம் என்றாள் மதுரா...

       அனைவரும் ஒன்று சேர்ந்து குதூகலமாய் அந்த நாளை கழித்தனர்.

  கடந்த மாதம் மதியின் வளைகாப்பிற்காக அனைவரும் சந்தித்தது. பிறகு இன்றுதான் பார்க்கின்றோம். சொந்தபந்தங்கள் ஒன்று சேரும்போது எவ்வளவு ஆனந்தமாக உள்ளது என்று க்ரித்திக்கின் அம்மா பூரித்தார்.

'பூ' கம்பமாய் வந்த பூகம்பம்Where stories live. Discover now