****30****

4.3K 133 10
                                    

            அதிகாலை 4.30. முகூர்த்தம் நெருங்க, நெருங்க மதுராவிற்கு மனதினுள் ஏதோ செய்து கொண்டிருந்தது. சற்று நேரத்தில் தன் கழுத்தில் புதியாய் சேரப் போகும் ஒரு அணிகலன், பெண்ணின் அடையாளம், க்ரித்திக்கின் மனைவி என்ற அதிகாரம், புதிதாக மாறப் போகும் பழக்கங்கள், புதிதாக ஏற்படப் போகும் உறவுகள், தன் பொறுப்புகள், கடமைகள்....

    அத்தை நான் எல்லாவற்றையும் சாமாளித்துவிடுவேன் அல்லவா? புது இடம், புது உறவுகள்...

      நீ பயப்படாத மதுரா... உன்னை பற்றி எங்களுக்கு தெரியும். நீ அனைத்தையும் கற்றவள். எளிதில் எவற்றையும் பழகிவிடுவாய். நல்லது கெட்டது என அனைத்தையும் உனக்கு கற்றுக் கொடுத்து இருக்கின்றோம் அல்லவா?

      ஹா.. ஆமாம் அத்தை ஆனாலும் மனதிற்குள் ஏதோ பயம் வருகிறதே.?

    அது இயல்பானது தான் மதுரா. அனைத்து பெண்களுக்கும் இந்நேரத்தில் வருவது தான். டென்சன் ஆகாத முகத்தில் அப்படியே தெரிந்தால் நன்றாகயிராது.

    ம்.. ஆமாம் ஆமாம், அப்றம் போட்டோல உன்னைவிட நாங்கள் தான் அழகாக இருப்போம் என்றாள் மதுராவின் தங்கை.

       போடி....

    மதுராவின் போன் ஒலிக்க, போச்சுடா.... கால் வந்திடுச்சா? இனி இவள் நம் பேச்சைக் கேட்க மாட்டாள். அதானால் அவள் மொபைலை வாங்குங்கள் என்று மதி கூற, மதுராவின் தங்கை தாவிப்பிடித்து போனை பிடுங்கிவிட்டாள்.

     அக்கா ப்ளீஸ் பொபைலை தரச் சொல்லு. 2 மினிட்ஸ் பேசிவிட்டு வைத்துவிடுகின்றேன்.

   நோ மதுரா.

     சரி சரி விளையாடாமல் சீக்கிரம் கிளம்புங்கள். நேரம் ஆகிறது என்று மதுராவின் சித்தி கூறினார்.

     கதவு தட்டப்படும் சப்தம் கேட்க.. என்ன மதுரா அதற்குள் உன் க்ரித்திக் முகூர்த்தம் வரை வெயிட் பண்ண முடியாதென்று இப்பொழுதே வந்துவிட்டாரா? என்று மதி கேட்டுக் கொண்டே கதவை கொஞ்சமாக திறந்து யார் என்று பார்த்தாள்.

'பூ' கம்பமாய் வந்த பூகம்பம்Where stories live. Discover now