****17****

5K 156 3
                                    

            இருவரும் பேசிமுடித்துவிட்டு கீழே வர, என்னப்பா கிளம்புவோமா என்று க்ரித்திக்கின் அம்மா கேட்க....

     அதற்குள்ளாகவா..? மற்ற விஷயங்கள் எல்லாம்...... என்று இழுத்தான்.

        பெரியவர்கள் நாங்கள் பேசிக் கொள்ளமாட்டோமா.... சிரித்தவாறே அவன் காதைத் திருகினார்.

        அனைவரும் சிரிக்க பிரியா விடைப்பெற்றான் அவளிடமிருந்து.

      மதுராவிற்கோ நடத்தவை எல்லாம் கனவோ என்பது போல இருந்தது. தலைகால் புரியாமல் தவித்தாள்.

        என்னடி சந்தோஷமா...? வருகிற மாதம் இரண்டாம் முகூர்த்தத்தில் திருமணம். உன் க்ரித்திக்கிடமும் சொல்லிவிடு, இருவரும் அதற்குள் காதலித்துக் கொள்ளுங்கள் காதலர்களாக என்று சிரித்தாள் மதி.

        என்ன...... வருகின்ற மாதத்திலேவா...? பணத்திற்கு என்ன செய்யப் போகிறோம்???

     ஒன்றும் கவலைப் படுவதற்கு இல்லைடி. க்ரித்திக் அம்மா என் வீட்டிற்கு மகாலட்சுமியே வருகின்ற போது நகை எதற்கு?? என் வீட்டு மகாலட்சுமிக்கு நானல்லவா நகை போட வேண்டும்...? திருமணம் முழுவதும் எங்கள் ஏற்பாடுதான் நீங்கள் கவலைக் கொள்ளாதீர்கள் என்றிருக்கிறார் மதுரா....

        அவர்கள் அப்படித் தான் கூறுவார்கள், நம் வீட்டுப் பெண்ணிற்கு நாம் தான் நகை போட வேண்டும் என்றார் மதுராவின் அம்மா.

      நீ சொல்வதும் சரிதானம்மா. என் வீட்டுக்காரரும் இவளுக்கு 3 பவுன் போடறேனு சொல்றாரு. அதனால் நீங்கள் பெரிதாக எதையும் செய்ய வேண்டாம். எதுவாக இருந்தாலும் கலந்து பேசிக் கொள்ளலாம் என்றாள்.

           உங்க வீட்டுக்காரரா? பைத்தியமாடி உனக்கு..? அவர் நகை போடறேனு சொன்னா நீ தலையாட்டிவிட்டு வருவாயா? அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லுமா.

     சரிசரி உங்க மாமாவிற்கு போன் செய்து விசயத்தைக் கூறுங்கள். அவன் ஏதோ முக்கிய வேலையாக வெளியூர் சென்றிருக்கின்றான்.

'பூ' கம்பமாய் வந்த பூகம்பம்Where stories live. Discover now