குழந்தையோடு விளையாடி நேரம் போனதே தெரியலைங்க... வார்த்தையே வரலைங்க அவளுக்கு... ஆனாலும் மணி கணக்கா பேசுறா... எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா..
அப்படியா? நீ கூடதான் குழந்தையிடம் இருந்த போது அழகாக இருந்தாய் என்று அவளை இழுத்து மடியில் சாய்த்துக் கொண்டான்.
ம்... தெரியுமே நீங்க இதைதான் நினைத்திருப்பீர்கள் என்று....
ஆமா... முன்னாடி நான் செய்த வேலை என்றாயே... நான் என்ன நினைத்தேன் என்று தெரியுமா?
அதான் அப்பொழுதே சொன்னேனே...
என்ன நினைத்தேன்...
குழந்தை போல் இருக்கிறாள்.. இவளே இன்று குழந்தையை சுமக்கின்றாளே என்றுதான் நினைத்தீர்கள்....
எப்படி டி.....இப்படியெல்லாம்???
மிஸ்டர் க்ரித்திக்.... ஐயம் யுவர் வொய்ப். உங்க கண்ணைப் பார்த்து நான் சொல்வேன் என்ன நினைத்தீர்கள் என்று..... தட்ஸ் அவர் லவ்....
உங்க அப்பா ஜாதகத்தைப் பார்த்து சொல்வதை நீ கண்களைப் பார்த்து கூறுகிறாயே...... பலே... என்றான் கிண்டலாய்...
நக்கலா உங்களுக்கு..... நான் சொல்லாமலே எனக்கு என்ன வேண்டும் என்று தெரிந்து அதை சர்ப்ரைஸாக கொடுப்பது.... எப்போ எங்க வீட்டிற்கு போக நான் ஆசைப்படுகிறேன் என்று தெரிந்து அழைத்துச் செல்வது, நானே சண்டை போட்டாலும் அதிலும் என் பக்க நியாயத்தைக் கூறி சமாதானம் செய்வது என எனக்காக எல்லாம் செய்ற நீங்க மட்டும் எதைவச்சு கண்டுபிடிச்சீங்க சார்....
ம்.... நீ சொன்ன அதே லவ் தான்டி என் செல்ல பொண்டாட்டி...
ஓ... நீங்க பண்ணா லவ் நான் பண்ணா... எங்க அப்பா மாதிரி ஜாதகம் பாக்கறேனா??
கலகலவென சிரித்தான்....
ரொம்ப சிரிக்காதீங்க....
சரிடி... நான் சிரிக்கலை... நீ தூங்கு...
தூக்கம் வரலைங்க.. கொஞ்ச நேரம் பேசலாம்.
இப்பயும் அதைத்தானேம்மா பண்றோம்.
சரி சொல்லுங்க இன்னும் இரண்டு மாசத்துல நம்ம பிராஜெக்ட முடிக்கனும். பிரசென்டேசன்ன முடிச்சிடுவோம்ல??
ம் எல்லாம் பக்காவா முடிஞ்சிடும் டா. ஆனால் என்ன இரண்டு மாதத்திற்கு பிறகு என்பதுதான் கொஞ்சம் பயமா இருக்கு...
பயமா? உங்களுக்கா...? இரண்டு மாதம்னா என்ன பயம்ங்க?
ஏய் லூசு மறந்துட்டியா?? உனக்கு அப்போ டெலிவரி டைம் டா....
அட ஆமால.... என்னங்க டெலிவரினு சொன்னதும் தான் நியாபகம் வருது, இன்னும் இரண்டு நாள்ல செக்கப் போகனும்ங்க. நீங்க வந்து கூட்டிட்டு போங்க.
ம் சரிடா... நான் தான் கண்டிப்பா வருவேன்.
சரிங்க... அம்மாகிட்ட இங்கயே தங்கறேனு சொல்லிட்டீங்க இல்ல!?
ம் முன்னாடியே சொல்லிவிட்டேன் மது. நாளைக்கு ஆபிஸ் போயிட்டு மாலையில் தான் வீட்டிற்கு செல்ல வேண்டும்.
நாளைக்கு அப்போ நான் தனியாகத்தான் இருக்க வேண்டுமா??
நான் தான் இரண்டு நாளில் வந்துவிடுவேன் அல்லவா? கவலைப் படாதேம்மா.... நீ பாப்பா உடன் இருந்தால் இந்த இரண்டு நாட்கள் சீக்கிரம் ஓடிவிடும். இரண்டு நாளைக்கு ஒருமுறை நான் இங்கே வந்துவிடுகிறேன். மற்ற நேரங்களில் நாம் வீடியோ கால்ல பார்த்துக் கொள்ளலாம்..
ம் சரிங்க... அம்மாவிடம் நேரத்திற்கு சாப்பிடச் சொன்னேன் என்று கூறுங்கள். நான் தினமும் அம்மாவிற்கும் கால் பண்றேன். நானும் என்னை பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன் என்று கூறுங்கள். அப்றம் வரும்பொழுது க்ருபாவையும் கூட்டி வாருங்கள். நான் இல்லாமல் அவளுக்கும் போரிங்கா இருக்கும்.
சரிசரி... போதும்... எல்லாவற்றையும் நான் கூறிவிடுகிறேன். முதலில் நீ தூங்கு....
ம்.....உங்க மடிலயே படுத்துக் கொள்ளவா?
என்னமா கேக்ற.... இப்படியே தூங்கு... என்று அவளை தூங்க வைத்து அவன் சுவற்றில் சாய்ந்தவாறே உறங்கிப் போனான்.
YOU ARE READING
'பூ' கம்பமாய் வந்த பூகம்பம்
Romanceமதுரபாஷினி..... ஒரு பெண்னின் வாழ்வில் ஆணின் அவசியமும் ஒரு ஆணின் வாழ்வில் பெண்னின் அவசியமும் பற்றி அழகான காதலின் முலம் கூறும் மதுரபாஷினியின் வாழ்க்கையை இந்நாவலில் பகிருகிறேன்.....