நீங்க எப்பவும் கோவிலுக்கு வருவீங்களா க்ரித்திக்?
இல்லை மது அம்மா வரனும்னு ஆசைப்பட்டால் மட்டும் வருவேன்.
நான் வாரம் ஒருமுறையேனும் வந்துவிடுவேன். வேண்டுதலாக இருந்தாலும் சரி, நன்றி கடனாக இருந்தாலும் சரி தோன்றியவுடன் வந்துவிடுவேன்.
அப்படியானால் சாமிக்கு இன்னிக்கு ட்ரீட்டா?
என்ன.....?அதான் நன்றி கடனானு கேக்றேன்.
ஆமா, உங்களுக்கு எப்படி தெரியும்...?
ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் வேலை கிடைத்திருக்கிறது அப்படியானால் ட்ரீட் தானே....
பரவாயில்லை சரியாகத் தான் யோசிக்கிறீங்க. ஆனால் வீட்டிற்கு செல்வதை பற்றி மட்டும் தான் யோசிக்க மாட்டேன் என்கிறீர் போல!.. நேற்று இரவு வீட்டிற்கு சென்றீர்களா இல்லையா?
ம் போனேன் மது, அம்மாவிற்கு சொல்லி புரிய வைத்துவிட்டு தான் வந்தேன்.
ம் அப்போ ஓகே தான். அம்மாவை அன்று சோக முகத்தோடு பார்ப்பதற்கே வருத்தமாக இருந்தது. அதிலும் அப்படி அம்மாவை பார்த்தும் இவ்வளவு சாந்தமானவரை அதிர்ந்து பேசுகிறானே என்று உங்கள் மீதுதான் கோபம் வந்தது.
நான் என்ன செய்வது மது. எனக்கும் அன்று வருத்தமாகதான் இருந்தது. ஆனால் என்ன செய்வது மது இந்த அளவிற்கு கூட நான் கோபப்படவில்லை என்றால் அம்மா அவர்கள் நலனில் துளியும் அக்கரை எடுத்துக் கொள்ள மாட்டார். அதான் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டியதாகிறது. இனி அவ்வாறு நடக்காது மது எல்லாம் சரி ஆகிவிட்டது.
எப்படி என்றாள் ஆவலாக.....
எப்படி என்றால்? மனசுல இருந்ததை சொல்லி புரிய வைத்தேன், புரிந்து கொண்டார்.
நல்லது தான். சரி அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது. கிளம்புவோமா??
வா.. போகலாம் என்று எழுந்து நடந்தனர்.
அருகில் விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள் மதுராவை இடிக்க அவள் நிலை தடுமாறி அவன் மீது சாய்ந்தாள்.
ஒரு பையன் அழகா இருந்திட கூடாதே மேல இடிக்கிறீங்களே என்றான் நக்கலாக..
ஐய்ய..... அழகுங்றதுக்கு அர்த்தம் தெரியுமா??? எனக்கு ஒன்றும் மட்டமான ரசனை எல்லாம் கிடையாது என்று பதிலடி கொடுத்தாள்...
போதும் போதும்.... நான்தான் வண்டி ஓட்டனும் நினைவில் வைத்துக் கொள் என்றான்.
அய்யோ ஆமால்ல, க்ரித்திக் நீங்க செம்ம க்யூட். ஆக்சுவலி இங்க இருக்க அத்தனை பெண்களும் உங்களை தான் பார்கிறார்கள் அவ்ளோ அழகு. எஸ்பெஸலி அந்த ஆன்ட்டி என்று 35 வயது பெண்மனியை காட்டி சிரித்தாள்.
எம்மா தெய்வமே போதும்மா..... என்று கை கூப்ப இருவரும் சிரித்துக் கொண்டே காரில் ஏறினர்.வெகு சீக்கிரத்தில் அலுவலகம் வந்துவிட்டதை போல் உணர்ந்தாள். இந்த நேரம் இப்படியே நீளக் கூடாதா என்று யோசித்தாள்.....
என்ன ஆனாலும் சரி மதுரா அவன்முன் உன் உணர்வுகளை வெளிப்படுத்திவிடாதே என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டாள். ஆனால் அந்த வார்த்தைகள் எல்லாம் சொல்லிக்கொள்வதோடு மட்டும் தான் இருந்தது. அவனை பார்க்கும் நொடியெல்லாம் இவள் மனதிற்குள்
அவளது காதலின் உணர்வலைகள் ராட்சஸ அலைகளையே எழுப்பிக் கொண்டிருந்தன. ஆனாலும் மனதினுள் தீர்கமான முடிவெடுத்தாள்.....அந்த முடிவு....
YOU ARE READING
'பூ' கம்பமாய் வந்த பூகம்பம்
Romanceமதுரபாஷினி..... ஒரு பெண்னின் வாழ்வில் ஆணின் அவசியமும் ஒரு ஆணின் வாழ்வில் பெண்னின் அவசியமும் பற்றி அழகான காதலின் முலம் கூறும் மதுரபாஷினியின் வாழ்க்கையை இந்நாவலில் பகிருகிறேன்.....