****16****

5K 170 9
                                    

       மாலை மதுராவின் தந்தை பரபரப்பாக வேலைப் பார்த்தார். அவர்கள் வந்துவிடுவார்கள், மதுரா ரெடி ஆகிவிட்டாளா..?

       ஆச்சுங்க.. இன்னும் ஐந்தே நிமிடங்களில் ரெடி ஆகிவிடுவாள்.

       மதுரா காலையில் செய்த அலங்கரத்தில் பாதி கூட இப்பொழுது செய்யவில்லை. அதே புடவை, ஒரு முழம் பூ, கையில் இரண்டே வளையல்கள், சின்னதாய் ஒரு பொட்டு என வெகு சாதாரணமாய் ஒப்பனைகளை முடித்தாள்.

          என்னடி இப்படி கிளம்பியிருக்க? காலைல அவ்வளவு அழகா கிளம்பினாயே..?

     அம்மா... சும்மா இருங்க, நான் இப்படித்தானே வாழ்க்கை முழுவதும் இருக்கப் போகிறேன் என்றாள் சலிப்புடன்.

      அதற்குள் மதுராவின் அக்காள் மதிவதனியும் வந்துவிட, என்னம்மா காலைலயே வராமல் இப்பொழுது வருகிறாய் என்றார் அவ்விருவரின் தாய்.

        வீட்டில் கொஞ்சம் வேலை அம்மா அதான். இப்பொழுதுதான் வந்துவிட்டேனல்லவா இனி ஆக வேண்டியதைப் பார்ப்போம் என்றாள் மதிவதனி.

       மதுரா என்னடி இவ்ளோ டல்லா மேக்கப் போட்டிருக்க? இங்க வா நான் அலங்காரம் செய்கிறேன் என்று அழைத்தாள்.

       இல்லை அக்கா... இதுவே போதும். விட்டு விடுங்களேன் என்றாள்.

        என்னம்மா என்ன இவள் இப்படி பேசுகிறாள் என்று கேட்டாள்.
     உனக்கும் தான் எல்லாம் தெரியுமே அப்புறம் என்னடி என்னிடம் கேட்கிறாய் என்றார்.

        ம்ம்... சரி சரி... பிரபு எங்கே என்று தம்பியை தேடிச் சென்றாள்.

       அதற்குள் வரன் பார்க்க வருபவர்கள் வந்துவிட, ஏம்மா எல்லாரும் வந்துட்டாங்க பாருங்க... வந்தவர்களை கவனியுங்கள் என்று மதுராவின் தந்தை குரல் கொடுத்தார்.

        மதுராவின் அம்மாவும், அக்காவும் வந்து அனைவரையும் வரவேற்று தண்ணீர் கொடுத்து உபசரித்தனர்.

       இரு குடும்பத்தினரும் மற்வர்கள் முன்னாள் குடும்பங்களைப் பற்றியும் சொந்தங்களைப் பற்றியும் பேசிக் கொள்ள, பெண்ணை வரச் சொல்லுங்கள் என்று ஒரு பெரியவர் ஆரம்பித்தார்.

'பூ' கம்பமாய் வந்த பூகம்பம்Where stories live. Discover now