மாலை.....
மாப்பிள்ளை வீட்ல இருந்து பக்கமா வந்துடாங்க. எல்லாம் ரெடியா? சந்தனம், குங்குமம் தட்டு எடுத்துவாங்க, வாசல்ல இருந்தே வரவேற்கனும். மாடில தான் நலங்கு வைக்குறோம், அங்க நாற்காலி எல்லாம் வரிசையா இருக்கானு பாருங்க..
மதுராவின் தந்தை மிகவும் பரபரப்பாக வேலைகளை செய்தார். அவர் மட்டுமல்ல மொத்த வீடே மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. அம்மா மதி, மதுரா ரெடியானு கொஞ்சம் பாரும்மா.. அவங்க எல்லாரும் வந்துவிட்டால் உடனே பாப்பாவை கூப்பிடுவாங்க நலங்கு வைக்க. அதனால போயி பாரும்மா. சீக்கிரம் கிளம்ப சொல்லு..
அத்தை மதுராவை ரெடி பண்ணிட்டீங்களா? அவங்க வீட்ல இருந்து எல்லாரும் பக்கமா வந்துட்டாங்க.
அதெல்லாம் ரெடி தான். மாப்பிள்ளை பக்கமா வரலை. வீட்டுக்கே வந்துட்டாங்க மதி.
அக்கா மாமா வந்துட்டாரு.... பிரபு அவசரமாக உள்ளே வந்து கூறினான்.தெரியும் டா கத்தாத என்றாள் மதுரா.
அத்தை எப்படி கரெக்டா சொன்னீங்க?
கொஞ்சம் அவளை பாரு என்று மதுராவைக் காட்ட,
மதுராவோ போனில் பேசிக் கொண்டிருந்தாள்.யாருகிட்ட பேசுறா இந்த நேரத்துல?
வேற யாரு..? அவங்க ஆளு தான்...
ஆள் என்றதும் அத்தை... சும்மா இருங்க.. என்று சினுங்கினாள் மதுரா.
பின்ன என்ன மதுரா.... இப்போ பார்க்கத்தான் போறீங்க.. ஆனால் போன் கட் பண்ணாம பேசிட்டே இருந்தால் வேறு என்ன சொல்வது... என்று அனைவரும் சிரித்தார்கள்.
சரி சரி மேல போலாம். கூப்பிடறாங்களாம் என்று மதுரா சொல்லி முடிக்கவும், மதுராவின் தாயார் மதுராவை கூப்பிடுறாங்க வாங்க என்று உள்ளே வந்தார்.
அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு சிரித்தனர்.
என்னடி சிரிச்சுட்டு இருக்கீங்க?
அம்மா.. இங்க பாரு நீங்க கூப்பிடுறதுக்குள்ள அவளே எழுந்துட்டாள் வரதுக்கு..
YOU ARE READING
'பூ' கம்பமாய் வந்த பூகம்பம்
Romanceமதுரபாஷினி..... ஒரு பெண்னின் வாழ்வில் ஆணின் அவசியமும் ஒரு ஆணின் வாழ்வில் பெண்னின் அவசியமும் பற்றி அழகான காதலின் முலம் கூறும் மதுரபாஷினியின் வாழ்க்கையை இந்நாவலில் பகிருகிறேன்.....